Sunday, 20 March 2011

கணினியை உடனடியாக நிறுத்தி அதே நிலையில் மீண்டும் திறப்பதற்கு உதவும் மென்பொருள்



கணினியில் திறந்திருக்கும் அனைத்து புரோகிராம்ங்களையும் உடனே நிறுத்திவிட்டு கணினியை அனைத்துவிடலாம்.
பின்னர் கணினியை திறக்கும் போது நிறுத்தமுதல் இருந்த நிலையில் திறந்திருந்த அனைத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்ள உதவுகிறது. SmartClose எனும் மென்பொருளாகும்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே

கணினியில் காலியாக இருக்கும் பால்டர்களை நீக்கிவிடுங்கள்



கணினியின் வேகத்தை பற்றி அதிகம் கவலைப்படுபவரா?
அவ்வாறாயின் கணினியை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

தேவையல்லாத மென்பொருட்களை நீக்கிடுதலும் அவற்றில் ஒன்று. அவ்வாறு செய்யும் போது அதிகமான நேரங்களில் அந்த மென்பொருட்களில் பால்டர்கள் மற்றும் desktop.ini / thumbs.db   போன்றவை நீக்கப்படுவதில்லை. இவற்றை கண்டுபிடித்து நீக்குவதற்கென்றே இருக்கிறது RED என்ற மென்பொருள்.
ஏனைய மென்பொருட்கள் போல அல்லாது தேவையல்லாத பால்டர்கள் இருக்கும் லொகேஷனையும் காட்டுகிறது இந்த மென்பொருள்.  எம்ப்டி பால்டர்களை கண்டுபிடிக்க இந்த மென்பொருளை நிறுவி திறந்து அதிலிருக்கும் Search என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

பால்டரின் தன்மை பற்றி வலப்பக்கத்தில் நிற வேறுபாட்டுடன் காட்டப்படும்.

எம்ப்டி பால்டர்களை அழித்துவிட delete folders என்பதை கிளிக் செய்துவிட்டால் சரி.

அழிக்கப்படும் பால்டர்கள் ரீசைக்கிள் பின் இல் சேமிக்க வேண்டுமா அல்லது முற்றாக நீக்க வேண்டுமா என்பதை ஆப்ஸன் மூலம் தேர்வு செய்யலாம்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே

கீபோட், மவுஸை பயன்படுத்தாத போது லாக் செய்வதற்கு.



தொடர்ச்சியாக கணினியை பயன்படுத்திவிட்டு சிறிது நேர ஓய்விற்காக அவ்விடத்தை விட்டு விலகி செல்லும்போது
குழந்தைகள் மற்றும் ஏனையோர் தேவையில்லாமல்

கணினியின் கீபோட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு உங்கள் கணினியின் கீபோட் மற்றும் மவுஸை தற்காலிகமாக லாக் செய்து வைக்க KeyFreeze  என்ற மென்பொருளால் முடிகிறது.

இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின்னர் ரன் செய்து லாக் செய்யலாம். மீண்டும் பயன்படுத்த லாக்கை எடுப்பதற்கு Ctrl+Alt+Del –> கீகளுடன் Esc கீயையும் அழுத்திவிட்டால் போதும்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே http://keyfreeze.com/

பேஸ்புக் நண்பர்களை கூகிள் மேப்பில் தெரியச் செய்வதற்கு உதவும் தளம்.



பேஸ்புக் நண்பர்களின் ஜியோகிராபிக் லாக்கேஷனை
கூகிள் மேப்பில் தெரியும்படி செய்வதற்கு உதவி செய்கிறது ஒரு தளம்.

உங்களது பேஸ்புக் கணக்கை WhereMyFriends  என்ற அப்பிளிகேஷனுடன் கனெக்ட் செய்ததும் கூகிள் மேப்பில் உங்கள் நண்பர்களின் இடங்களை இந்த இணைப்பில் உள்ளது போன்று காட்டும்படி செய்து விடலாம்.

குறிப்பு : இவ்வாறு உருவாக்கப்பட்ட மேப்பில் மாற்றங்கள் செய்ய முடியாது. மற்றும் இந்த மேப்பை அனைவரும் பார்க்கலாம்.
இணைப்பு இங்கே http://wheremyfriends.be

பேஸ்புக்கில் முன்பிருந்த போட்டோ வியூவரை மீண்டும் கொண்டுவரலாம்.



பேஸ்புக் பாவனையாளர்கள் படங்களை பார்வையிடுவதற்காக போட்டோ வியூவரில்
பேஸ்புக் சில மாற்றங்களை செய்துள்ளது. அந்த மாற்றத்தை விரும்பாதவர்கள் முன்னர் இருந்த போட்டோ வியூவரையே கொண்டு வருவதற்கு என்ன செய்யலாம் என்கிறீர்களா?

அதற்கு குரோம் உலாவியில் Revert Facebook Photo Viewer  என்ற extension  ஐ நிறுவியனால் போதுமானது.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே

கணிதம், விஞ்ஞானம் மற்றும் எந்த பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு உதவும் இணையத்தளங்கள்



தற்காலத்தில் மாணவர்களுக்கு அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கு இணையமே முக்கிய சோர்ஸ்ஸாக இருக்கிறது.
ஆன்லைனிலேயே பாடங்களை படித்துமுடிக்கவும் செய்கிறார்கள் சிலர்.

இதேபோல் ஆன்லைனில் கணிதம், விஞ்ஞான பாடங்களையும் மற்றும் ஏனைய பாடங்களையும் கற்பதற்கு உதவி புரிகின்ற  இணையத்தளங்களைப்பற்றிய தகவல்கள் இங்கே.

Wolfram Alpha

கணித சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுகிறது இந்த தளம்.

எந்த கணிப்பீடாயினும் அதன் விபரங்களை கொடுத்ததும் ஒவ்வொரு படிமுறையாக காட்டுகிறது இந்த தளம்.

இணைப்பு http://www.wolframalpha.com/
Mathaway

algebra, calculus, trigonometry, statistics  போன்றவற்றையும் மற்றும் ஏனைய கணித சமன்பாடுகளின் பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது இத்தளம்

இணைப்பு http://www.mathway.com/
Babbel

வேறு மொழிகளை கற்றுக்கொள்வதற்கும் உங்கள் பேச்சு திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் உதவுகிறது இந்த தளம்.

http://www.babbel.com/
Dynamic Periodic Table

ஹெமிஸ்ரி பாடங்களை கற்பவர்களுக்கு
Dynamic Periodic Table போன்ற வசதிகளை தருகிறது இந்த தளம்.

http://www.ptable.com/

Tutor2u

Economics, Business, Politics, Enterprise, Law, Sociology, History, Religious பாடங்களுக்குரிய டியூட்களை வழங்குகிறது இந்த தளம்

http://www.tutor2u.com/

Verbalearn

ஆங்கில மொழித்திறமையை வளர்த்துக்கொள்வதற்கு உதவுகிறது இந்த தளம்.

http://verbalearn.com
/

இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு..



இணைய பாவனையில் வீடியோ பார்க்கும் போது அல்லது டோரன்ஸ் மூலம் டவுண்லோட் செய்யும் போது
திடீரென இணைய வேகம் குறைந்ததை அடிக்கடி உணருபவாரா நீங்கள் அவ்வாறாயின் இந்த தளம் மூலம் ஏன் அவ்வாறு நிகழ்கிறது என்பதை கண்டறியலாம்.

உங்களின் இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் குறிப்பிட்ட சில பாவனைகளுக்காக கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை இந்த இணைப்பில் செய்யப்படும் ஸ்கானிங் மூலம் அறியலாம்.

சில இணைய சேவை வழங்குனர்களால் (ISP) குறிப்பிட்டளவு பாண்ட்வித்தை நீங்கள் உபயோகித்ததும் உங்கள் இணைய வேகம் கட்டுப்படுத்தப்படலாம். உதாரணமாக 100KB டவுண்லோட் வேகமெனில் வீடியோ அல்லது டவுண்லோட் செய்யும் போது வெறும் 30 KB வேகத்தையே நீங்கள் பெறுவீர்கள்.

இதை கண்டுபிடிக்கவே இந்த தளம் உதவுகிறது.

பைல்களை ஹாஸ்டிங்க் தளங்களுக்கு அப்லோட் செய்வதற்கு உதவும் டூல்



இணையவசதி இருக்கும் கணனிகளில் உங்களிடம் இருக்கும் பைல்களை அப்லோட் செய்து பகிர்வதற்கு விரும்புவீர்கள்.
எனினும் பைல் ஹாஸ்டிங்க் தளத்திற்கு உலாவி மூலம் அப்லோட் செய்யும்போது அதிக நேரம் வீணாகலாம். இதைவிட எந்த எந்த பைல்களை(படங்கள், டெக்ஸ்ட், பைல்கள்) அப்லோட் செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் சேர்த்து டிராக் டிராப் முறையில் ஒரேதடவையில் தேர்வு செய்து அப்லோட் செய்யும் நடவடிக்கைக்கு உதவுவதே Zuploader என்ற டூலாகும்.

டவுண்லோச் செய்வதற்கு இங்கே.
http://code.google.com/p/zscreen/downloads/list