கத்ரின் அவுரோரா கிரே என்ற அச்சிறுமி கடந்த 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையே இதனைக் கண்டறிந்துள்ளார். தற்போது 5 ஆம் வகுப்பில் பயின்றுவரும் அவர் தனது எதிர்கால இலட்சியம் வானியலாளர் ஆவதே எனத் தெரிவிக்கின்றார். இந்த வெடித்துச் சிதறும் நட்சத்திரமானது சுமார் 24 மில்லியன் ஒளி வருட தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது கண்டுபிடிப்பானது ரோயல் கனேடிய வானியல் சமூகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெடித்துச்சிதறும் நட்சத்திரம் (Super Nova ) எனப்படுவது பிரமாண்டமான நட்சத்திரங்கள் தமது எரிபொருட்கள் நிறைவடைந்ததன் பின்னர் மாபெரும் ஒளியாற்றலை வீசிக்கொண்டும் பாரிய சத்தத்துடனும் வெடித்துச்சிதறுதலாகும். இதன்போது வெளியிடப்படும் ஓளிர்வானது, சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய ஆற்றலை விட அதிகமானதாகும். |

Wednesday, 5 January 2011
வானியல் அபூர்வத்தைக் கண்டுபிடித்து 10 வயது சிறுமி சாதனை _
4000 வருடங்கள் வாழும் தாவரம்
![]() கம்பீரமாக வளரும் இத்தாவரம் 24 மீற்றர் சுற்றளவை கொண்டுள்ளது. 120 மீற்றர் உயரத்தையும் உடைய இத்தாவரம் 2400-4000 வருடங்கள் உயிர்வாழ்வதாக ஆய்வுகளினால் கண்டறியப்பட்டுள்ளது. இதன் எடை சராசரியாக 2000 தொன் என கணிக்கப்பட்டுள்ளது. ![]() ![]() |
கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் 'சிப்' கண்டுபிடிப்பு
![]() இப்போது விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள மைக்ரோ “சிப்”பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும். இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரை விட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். |
Subscribe to:
Posts (Atom)