Thursday, 20 January 2011

ஒரே இணையத்தளத்தை பார்வையிடும் மற்றொருவரிடம் அரட்டை அடிக்க Talkita




குறிப்பிட்ட இணையத்தளத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரம் உங்களைப்போல் அந்த இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடும் அதே

விடயத்தை வாசித்துக்கொண்டிருக்கும் மற்றொருவரிடம் அரட்டை அடிக்க முடிந்தால் ...

உதாரணமாக நெட்டில் ஒரு செய்தியை பார்க்கிறீர்கள் அந்த நேரம் மற்றொருவரும் அதைப்பார்வையிடுகிறார் அவரிடம் அதைப்பற்றிய கருத்துக்களை கேட்கலாம். அல்லது ஆன்லைனிலில் ஒரு பொருளை வாங்க நினைக்கிறீர்கள். அந்த நேரத்தில் அங்குவரும் மற்றொருவரிடம் சேர்ந்து அப்பொருளை வாங்க முடியுமல்லவா?.

இந்த வசதியைப்பெற உங்களிடம் கூகுளின் Chrome உலாவியும் அதனுடன் நிறுவ Talkita என்ற extension  இருந்தால் போதும் நெட்டில் ஒரே ஆர்வத்தை கொண்ட மற்றொருவரிடம் அரட்டை அடிக்கலாம்.


இந்த extension ஐ நிறுவியதும் browser bar இல் தெரியும் சாட் ஐகான் மீது கிளிக் செய்து செட்டிங்குகளை மாற்றங்கள் செய்துகொள்ளலாம். சாட் செய்வதற்கு பேஸ்புக் யூசர் ஐடியை பயன்படுத்தி லாகின் செய்துவிடுங்கள்.


குறிப்பு இந்த extension இன்னமும் பரிசோதனை நிலையில் இருப்பதால் பிரைவைசி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமைபெறவில்லை. அத்துடன் HTTPS என்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தளங்களில் இயங்காது.

டவுண்லோட் செய்ய

இணைய இணைப்பில் உருவாகும் பொதுவான பிரச்சனைகளை தீர்க்க



இணைய இணைப்பில் பிரச்சனைகள் உருவாகும் போது அவற்றை ஒவ்வொன்றாக கண்டறிந்து தீர்த்துக்கொள்வது சற்றே
கடினமான பணியாகும். இதைவிட இணைய இணைப்பில் பிழைகளை ஏற்படுத்தும் பொதுவான விடயங்களை ஒரே கிளிக்கில் கண்டறிந்து அதற்குரிய தீர்வை காண்பதென்றால் இலகுதான். அதற்கு உதவும் ஒரு டூல் Complete Internet Repair என்பதாகும்.
இந்த டூலை நிறுவியதும் திறக்கும் பிரதான விண்டோவில் இன்ரநெட் கனெக்ஸன் தடைப்படுவதற்கான IP conflicts, ping supplied DNS servers, flush DNS, check hosts போன்ற காரணங்களை தொகுத்து அவற்றை திருத்துவதற்கான வசதியும் காட்டப்படுகிறது. இதில் நீங்கள் விரும்புவதை தேர்வு செய்யலாம்.


பின்னர் Go ஐ கிளிக் செய்ததும் இணைய இணைப்பு மீண்டும் கிடைக்கும். Error Log வசதியும் உண்டு.

பயன்படுத்தி பயன்பெற்றால் உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.
டவுண்லோட் செய்ய Complete Internet Repai
r

குழுவினராக ஆன்லைனில் வீடியோ சாட்டிங்க் செய்யவதற்கு ஒரு தளம்.



பொதுவாக சாட்டிங்க் சேவைகளை வழங்கும் தளங்கள் அல்லது மெசெஞ்சர்கள் வீடியோ சாட்டிங்க் வசதியை தருவதில்லை
அவ்வாறு தந்தாலும் அவை 2 அல்லது 3 பேருடன் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும்.

குழுவாக சேர்ந்து ஆன்லைனில் வீடியோ சாட்டிங்க் செய்வதற்கு உதவுகிறது இந்த தளம் sifonr.com. இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்யாமல் உடனடியாக பெயரை கொடுத்து வீடியோ சாட்டிங்கை தொடங்கமுடியும். பிளாஸில் இயங்குகிறது.

வீடியோ அரட்டையை உருவாக்கிய பின்னர் தேவையான இடத்தில் அவற்றை எம்பட் செய்துகொள்ளமுடியும்.

இணைய முகவரி
http://www.sifonr.com/

கணினியில் எந்த மென்பொருள் இணையத்தை பயன்படுத்துகிறது?



இணையத்தை பயன்படுத்தும் போது தானகவே சிலநேரங்களில் அதன் வேகம் குறைவதை உணர்வீர்கள்.
நீங்களாக கணினிக்கு கட்டளைகள் வழங்காத போதும் அதில் நிறுவியிருக்கும் சில  புரோகிராங்கள் இணைய தொடர்பு கிடைத்ததும் அதை பயன்படுத்த தொடங்கும் போதே வேகம் குறைந்து சாதாரணமாக பார்க்கும் தளங்களை கூட பார்க்க முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் கணினியில் இருந்து எந்த புரோகிராம் இணையத்தை பயன்படுத்துகிறது என்பதை கண்டறிந்து அவற்றை நிறுத்தினால் வேகத்தை அதிகமாக்கலாமல்லவா?


இந்த வசதியை தருகின்ற மென்பொருளே
TCPEye 1.0  ஆகும்.  இதை நிறுவியதும் கணினியில் இருந்து இணையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தும் சாப்வேர்களை லிஸ்ட் செய்கிறது.  முக்கியமாக அவை எந்த நாடுகளுக்கு தொடர்பை ஏற்படுத்துகின்றது, எந்த புரோட்டோகோலை பயன்படுத்துகிறது, ஐபி முகவரி போன்ற விபரங்களை பட்டியலிடுகிறது. (வேறு மென்பொருட்கள் இவ்வாறு நாடுகளை பட்டியலிடுவதில்லை)


இவற்றில் தேவையில்லை என்று நீங்கள் கருதுபவற்றை வலது கிளிக் செய்து end process மூலம் நிறுத்தி முழுமையான இணைய வேகத்தை பெறலாமல்லவா?.