Saturday, 22 January 2011

ஒய்-ஃபை கதிர்களால் மனிதர்களுக்கு ஆபத்து!



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஒய்-ஃபை ( Wi - Fi : கம்பியில்லாத் தொடர்பு ) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அப்போது ஒய்-ஃபை(Wi - Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது எனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மொபைல் போன்களின் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை எனவும் தெரிவித்துள்ளனர்.
 

கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அளிக்கவும்!







BleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு (Hard Disk) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை (Temporary Files) தேடிப்பிடித்து அழிப்பதற்கு  பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலவி (Firefox Browser) யின் வேகத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க Bleachbit ஐ உபயோகிக்கலாம்.
இணைய உலவியில் நாம் விட்டுச் சென்ற தடயங்கள் (Traces), வரலாறு, குக்கீஸ் (Cookies) போன்றவற்றை இந்த மென்பொருள் நொடிப்பொழுதில் அழித்துவிடும்.
பையர்பாக்ஸ் முதல் கூகிள் குரோம் வரை எல்லா உலவிகளுடன் (Browser) ஒத்திசைவு கொண்டது இது. அடோபி ரீடர், அடோபி பிளாஷ், கூகிள் எர்த், ஜாவா, ஓபன் ஆபிஸ், ஸ்கைப் போன்ற 80 + பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை அடையாளம் கண்டு அழிக்க வல்லது.