Monday, 3 January 2011

CardSharp Folding Credit Card Knife

Iain Sinclair's CardSharp Credit Card Folding Knife(£15) is a svelte knife and folds into a card to fit in your wallet. It weighs just 13 grams, is only 2mm thick and features a stainless steel blade with a healthy 65mm cutting edge and a short serrated edge on the opposite side. When folded, a built-in sheath prevents you from accidentally touching the sharp blade. Check out the video, you can see how it does fold/unfold. It will start shipping from January for £15($23) and and can be pre-ordered. 





இணைய செய்தி பேஸ்புக் வைரஸ் எச்சரிக்கை





பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பலர் ஏமாற்றப்பட்டு, ஒரு விளம்பர சதிக்கு ஆளானார்கள். உலகெங்கும் உள்ள பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள உறுப்பினர் ஒருவர் அனுப்புவது போல மெசேஜ் ஒன்று வருகிறது. அதில், இந்த இடத்தில் கிளிக் செய்தால், இதுவரை நீங்கள் பார்க்காத பாலியியல் படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு லிங்க் கொடுக்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சிக்கு ‘distracting beach babes’ என்று பெயர் தரப்பட்டுள்ளது. சிறிய அளவில், அரைகுறை ஆடையுடன், ஒரு படம் காட்டப்படுகிறது. இதனால் கவனம் திருப்பப்பட்டவர்கள், இந்த படத்தில் கிளிக் செய்கையில், படம் இயக்கப்படாமல் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு, இந்த படம் இயக்குவதற்கான சாப்ட்வேர் உங்களிடம் இல்லை என்றும், அதற்கான சாப்ட்வேர் பெற இங்கு கிளிக் செய்திடவும் என்ற செய்தி கிடைக்கிறது. பின்னர் வருமானம் கிடைக்கும் விளம்பர அட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பதியப்படுகிறது. அத்துடன் மற்ற பேஸ்புக் நண்பர்களுக்கு இதே முறையில் செய்தி அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ 50 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக் தளம், தன் தளத்தின் பாதுகாப்பு வழிகளை இன்னும் வலுப்படுத்த வேண்டும். இது போல ஏதேனும் பொய் விளம்பரங்கள் கிடைக்கையில், தகுந்த எச்சரிக்கை செய்திகளை அனைவருக்கும் அனுப்ப வேண்டும். ஏற்கனவே இந்த அப்ளிகேஷனுக்கான லிங்க்கில் கிளிக் செய்தவர்கள், தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இதனை நீக்கும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
பேஸ்புக் தளத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகையில் அது குறித்து ஆய்வு செய்து தகவல்களைத் தரும் சோபோஸ் குரூப் (Sophos)  என்ற முகவரியில், தள உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை செய்தியையும், தகவல்களையும் தந்துள்ளது.

டெஸ்க்டாப் ஐ பகிர்வதற்கு உதவும் இலவச மென்பொருள்

இலவசமாகவும் பல வசதிகளுடனும் கிடைக்கும் Mikogo என்ற மென்பொருள் டெஸ்க்டாப் ஐ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு உதவுகிறது.
இதில் நீங்கள் எதிர்பார்க்கும் whiteboard, remote control, mouse pointers ஆப்ஸன் desktop switching ஆப்ஸன் போன்ற எல்லா வசதிகளையும் தருகின்றது Mikogo.

ரியல்டைமில் டெஸ்க்டாப்பை பகிரவும் இணையும் அனைவரும் எல்லா டெஸ்க்டாப்பையும் ரியல்டைமில் பார்க்கும் வசதியையும் தருகின்றது இது.

இல்வச கணக்கொன்றை திறப்பதன் மூலம் இதை பயன்படுத்த தொடங்கலாம்.

டவுண்லோட் செய்வதற்கு

http://www.mikogo.com/

ஜிமெயிலின் காண்டக்ஸ் மற்றும் பைல்களை இலகுவாக கையாள்வதற்கு சிறந்த பிளக்கின்

நீங்கள் ஒரு ஜிமெயில் பாவனையாளரெனின் அதிலிருக்கும் காண்டெக்ஸ் மற்றும் அட்டாச்மெண்ட் பைல்களை கையாள இலகுமுறை இருந்தால் நல்லது என விரும்பலாம்.

உங்கள் விருப்பம் நிறைவேற மெயில் புரவுசர் என்ற பிளக்கின் ஐ பயன்படுத்தலாம். இதை நிறுவுவதன் மூலம் இன்ரநெற் எக்புளோரர், பயர்பாக்ஸ், குரோமி என நீங்கள் பயன்படுத்தும் எல்லா உலாவிகளுடனும் சேர்ந்து இயங்குகிறது.

டவுன்லோட் செய்து நிறுவியதும் ஜிமெயில் கணக்கின் விபரங்களை தந்தால் போதுமானது. அனைத்தும் இண்டெக்ஸ் செய்து தயாராகியதும், மெயில் புரவுசர் பிளகின் உலாவியின் வலது பக்கத்தில் சைட் பார் (Sidebar) ஆக அமர்ந்து இயங்கத்தொடங்கும்.

Contacts மற்றும் Files என இரு டாப் தோன்றும். அதில் ஜிமெயிலிலுள்ள காண்டக்ஸ் மற்றும் பைல்களை கையாள முடிகிறது.

குறிப்பிட்ட காண்டக்ஸை அழுத்தியதும் அதின் மேலதிகவிபரங்கள் காண்டப்படும். பைல் டாப்பில் அட்டாச்மெண்ட்டாக மின்னஞ்சலில் வந்த பைல்களை தொகுக்கப்படும்.

குறிப்பிட்ட காண்டக்ஸ் அல்லது பைல்களை வேகமாக தேடிப்பெறும் வசதி இதன் சிறப்பாகும் பயன்படுத்தி பயன்பெற்றால் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

http://mailbrowser.com/

அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் முதல் பத்து நோய்கள்



உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.1.மாரடைப்பு (Coronary heart disease)
2.மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் (Stroke and other cerebrovascular diseases)
3.சுவாசப் பைத் தொற்றுக்கள் /நியுமோனியா (Lower respiratory infections)
4.சுவாசப்பை அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease)
5.வயிற்றோட்டம் (Diarrhoeal diseases)
6.HIV/AIDS
7.காச நோய் (Tuberculosis)
8.சுவாசப்பை புற்று நோய்கள் (Trachea, bronchus, lung cancers)
9.வீதி விபத்துக்கள் (Road traffic accidents)
10.முதிர்ச்சியடையாத குழந்தைகளின் பிறப்பு /நிறை குறைவான குழந்தைகளின் பிறப்பு (Prematurity and low birth weight)
இவற்றிலே மாரடைப்பு, மூளையின் இரத்தக் கசிவுகள் / பாரிசவாதம் , சுவாசப்பை அடைப்பு நோய், காச நோய், சுவாசப்பை புற்று நோய்கள் போன்றவற்றிற்கு முக்கிய காரணமாக இருப்பது புகைப் பிடித்தல்.

ஜிமெயிலில் தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலை மீளப்பெறுவது எப்படி?

ஜிமெயிலில் தவறுதலாக அனுப்பிய ஒரு மின்னஞ்சலை உடனே நிறத்துவதற்கு ஒரு வசதியுண்டு. சிலர் இதைப்பற்றி அறிந்திருக்கலாம்,
எனினும் புதியவர்களுக்காக சில தகவல்கள் இங்கே.

முதலில் ஜிமெயிலில் இந்த வசதியை அக்டிவேட் செய்வதற்கு ஜிமெயிலில் உள்நுழைந்து, “Labs” பக்கத்திற்குச் சென்று,  “Undo Send” சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும்.  (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில்,  பயனர் பெயர், “Setting” இடையில்,  பச்சை  நிற குடுவை  ஒன்று இருக்கும்.  அதுவே, “Labs” பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.)

மெயில் “Compose” செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும்.  நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, “Your Message has been send, Undo” என்ற இணைப்பு வரும்.  மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.