Sunday, 20 March 2011

கணினியில் காலியாக இருக்கும் பால்டர்களை நீக்கிவிடுங்கள்



கணினியின் வேகத்தை பற்றி அதிகம் கவலைப்படுபவரா?
அவ்வாறாயின் கணினியை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

தேவையல்லாத மென்பொருட்களை நீக்கிடுதலும் அவற்றில் ஒன்று. அவ்வாறு செய்யும் போது அதிகமான நேரங்களில் அந்த மென்பொருட்களில் பால்டர்கள் மற்றும் desktop.ini / thumbs.db   போன்றவை நீக்கப்படுவதில்லை. இவற்றை கண்டுபிடித்து நீக்குவதற்கென்றே இருக்கிறது RED என்ற மென்பொருள்.
ஏனைய மென்பொருட்கள் போல அல்லாது தேவையல்லாத பால்டர்கள் இருக்கும் லொகேஷனையும் காட்டுகிறது இந்த மென்பொருள்.  எம்ப்டி பால்டர்களை கண்டுபிடிக்க இந்த மென்பொருளை நிறுவி திறந்து அதிலிருக்கும் Search என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

பால்டரின் தன்மை பற்றி வலப்பக்கத்தில் நிற வேறுபாட்டுடன் காட்டப்படும்.

எம்ப்டி பால்டர்களை அழித்துவிட delete folders என்பதை கிளிக் செய்துவிட்டால் சரி.

அழிக்கப்படும் பால்டர்கள் ரீசைக்கிள் பின் இல் சேமிக்க வேண்டுமா அல்லது முற்றாக நீக்க வேண்டுமா என்பதை ஆப்ஸன் மூலம் தேர்வு செய்யலாம்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே

No comments:

Post a Comment