Saturday, 1 January 2011

Haifa Wehbe - Enta Tani (English subtitles) 2010

முகம்மது நபியின் கேலிச்சித்திரத்தினை வெளியிட்ட பத்திரிகை மீது தாக்குதல் முயற்சி

 
As-Athu.blogspot.com  01/01/2011 06:10:54 PM

  நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் டென்மார்க் நாட்டில் உள்ள பத்திரிக்கை நிறுவனமொன்றினை தாக்க முயற்சித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்தாக்குதலானது மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாணியில் இடம்பெற இருந்ததாகவும் அதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோபன்ஹெகன் நகரில் உள்ள இப் பத்திரிகை நிறுவனமானது கடந்த 2005 ஆம் ஆண்டில் முகம்மது நபியின் கேலிச் சித்திரத்திங்களை தனது பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தது.

மேற்படி சித்திரமானது அக்காலப்பகுதியில் உலகலாளவிய ரீதியில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

இதற்கெதிராக இஸ்லாமியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட இக்குழுவானது குறித்த நிறுவனத்தின் அலுவலகத்தில் நுழைந்து தங்களால் முடிந்த அளவில் கொலைகளை நடத்தத் திட்டமிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை



ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது.சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது.
லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது.
இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது.
அவ்வாறு கிளிக் செய்யும் போது, ஒரு வெற்றுப்பக்கம் தோன்றி, மேலும் தொடர இங்கே கிளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
அதைக் கிளிக் செய்தால் மீண்டும் அதேபோன்றதொரு தகவல் வருகிறது. மேலும் இந்தத் தகவலை ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் பரவி வருகிறது என்று சோஃபோஸ் எச்சரித்துள்ளது.
உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே விளம்பரங்களை பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் ஒன்றை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்துவதற்கான ஒரு மோசடி ஃபேஸ்புக்கில் நடப்பதாக சோஃபோளூ; கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தலை பாம்புகளின் வாழ்க்கை போராட்டம்



இதுவரை நாம் கண்டிராமல் இருந்தாலும் உலகில் அதிகமாக இரண்டுதலையுடன் காணப்படும் விலங்கினம் இரண்டுதலை பாம்புகளே!இரண்டு தலை இருந்தாலும் உடலிலில் உள்ள மற்ற உறுப்புகள் யாவும் ஒன்றே.
கரு உருவாகும் போதே இரண்டும் தனி தனியாகவே பிறப்பதற்கு முயற்ச்சிக்கும் ஆனால் இரண்டாக பிரிவதற்கு முன்பாகவே பிறந்துவிடும் ஆகவே இரண்டு தலையும் ஒரு உடலும் இருக்கும்.
இரண்டு தலைகளும் ஒரு உடலை பெற்றிருந்தாலும் இரண்டு தலைகளுக்குமே தெரியாது தாங்கள் இரட்டையர்கள் என்று.
உணவு உண்ணும் போது ஏதேனும் ஒரு தலையால் மட்டுமே உண்ணமுடியும், ஆனால் மற்ற தலையின் பசியும் காணமல் போய்விடும் அதனால் உணவு உட்கொள்ளாத தலைக்கு குழப்பம் ஏற்படும். ஆனால் உணவுக்காக வேட்டையாடும் பொழுது இரண்டு தலையும் வேட்டையாடும்.
உணவு உண்ணும் பொழுது மட்டுமல்ல குழப்பம், தான் போகும் பாதையை முடிவு செய்வதில் கூட குழப்பம் ஏற்படும், அதில் எது பலமானதாக இருக்கிறதோ அது மற்ற தலையுடைய பாம்பையும் தன்னுடனே இழுத்து செல்லும்.
எதிரி பாம்புகளை காணும் பொழுது பாம்பின் ஒரு தலை தப்பித்து கொள்ள நினைத்தாலும், மற்ற தலையானது சண்டையிட முயற்ச்சிக்கும், எனவே இறுதியில் மரணமே ஏற்படும். எனவே தான் காடுகளில் இரண்டு தலை பாம்புகளை காண்பது அரிது.
இரண்டுதலை பாம்புகள் சுமார் இருபது வருடம் வரை வாழும் திறனுடையது, அதைபோன்று இரண்டு தலை பாம்புகளின் வலது தலை தான் முடிவுகளை எடுக்கும் திறனுடையது, அதாவது எந்த உணவை உண்பது, எந்த பாதையில் செல்வது போன்ற முடிவுகளை.

3D ஐபோன்கள் விரைவில் அறிமுகம்



கண்ணாடிய அணிய அவசியமில்லாத 3டி ஐபோன்களை தயாரித்து விற்பனைக்கு விடஉள்ளது ஆப்பிள் நிறுவனம்.தற்போதுள்ள 3டி வீடியோக்களும், படங்களும் பார்ப்பதற்கு அதற்கான பிரத்யேக கண்ணாடிகள் அவசியம் தேவை.
தற்போது ஆப்பிள் நிறுவனம் அதற்கான திரைகளை தயாரித்து அதன்வழியாக படங்களை காண்பிக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக ஹாலோகிராம் சங்கேத குறியீடுகளை உபயோகித்து சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் ஐபோனிலும், கம்ப்யூட்டரிலும்பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

கூகுளை முந்தியது பேஸ்புக்




இணையதள ஜாம்பவனான கூகுள் சர்ச் இஞ்ஜினை முந்தி முதன்முறையாக பேஸ்புக் சாதனை படைத்துள்ளது. அமெரி்க்காவில், கூகுள் சர்ச் இஞ்ஜினைக் காட்டிலும் பேஸ்புக் இணையதள‌த்தை அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.இது குறித்து எக்ஸ்பீரியன் ஹிட்வைஸ் நிறுவனம் ‌நடத்திய கருத்துக்கணி்ப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஜனவரி முதல் நவம்பர் மாத வரையிலான காலகட்டத்தில், சமூகவலைத்தளங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது. கூகுள் பயன்பாடு இரண்டாம் இடத்திலும் (7.2 சதவீதம்), யாகூ மெயில் 3.52 சதவீதம், யாகூ 3.30 சதவீதம், யூடியூப் 2.65 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில், 400 மில்லியன் மக்கள் பேஸ்புக் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

My New Year Wish & Issue Calendar


Akon ft Snoop Dogg I Wanna Fuck You *HD* HIGH DEFINITION + Lyrics

Akon - Smack That ft. Eminem

இன்று கூகுளில் தெரிவது - '2011' இன் ரோமன் குறியீடு


2010 இன் கடைசிநாள் மற்றும் 2011 புது வருட பிறப்புக்கு முன்னைய நாளான இன்றைய தினத்தை கூகுள் இணையத்தளமும் உற்சாகமாக
கொண்டாடுகின்றது. தனது டூடில் இலட்சிணையை ரோமன் இலக்கத்தில் 2011 ஐ குறிக்கும் விதமாக MMXI என குறிப்பிட்டுள்ளது கூகுள் டூடில்.

கிரேகொரியன் கேலண்டர் படி சனிக்கிழமை ஆரம்பிக்கிறது 2011 புதிய வருடம். மூன்றாவது மில்லேனியம் மற்றும் 21 வது நூற்றாண்டின் 11 வது வருடமாகவும் இது திகழ்கிறது. 2010s Decade (தசாப்தத்தில்) 2வது வருடமாகவும் இருக்கும் '2011', வனங்கள் காடுகளின் சர்வதேச வருடமாகவும், இராசயனவியலின் சர்வதேச வருடமாகவும் ஐ.நாவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குலகத்தினரால், நள்ளிரவு 12.00 மணிக்கு நகர்ப்புற வெளிகளில் குதூகலமாக கொண்டாடப்படும் புதுவருட பிறப்பு அமெரிக்கா முதலான நாடுகளில் இன்னமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நியூயோர்க்க் நகரில் டைம்ஸ் ஸ்கொயார் மையத்தில், 70 அடி உயரத்திலிருந்து புதுவருட பந்து (New year Ball) வீழ்த்தபப்டவிருக்கிறது. 12 மணிக்கு அங்கிருக்கும் மிகப்பெரும் கடிகாரம் அலாரம் அடித்து உற்சாகமாக புதுவருடம் வரவேற்கப்படவிருக்கிறது.

பிரான்ஸில் பாரிஸ் ஈபிள் கோபுரத்திற்கு முன்னாள் இவ்வாறு புதுவருட வரவேற்பு கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. லண்டன் பாராளுமன்ற முன்றலில் நிறுவப்பட்டுள்ள கடிகாரம் அலாரம் அடித்து புதுவருட கொண்டாட்டமும், ஜேர்மனியில் New Year's Eve Silvester ஆக இக்கொண்டாட்டமும் அந்தந்த நாட்டு மக்களால் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்படுகிறது.