![]() உங்களுக்கு மட்டுமல்ல, இப்படி 100, ‘கீ’க்கு மேல் எஸ்.எம்.எஸ்., அனுப்புவோருக்கும், எஸ்.எம்.எஸ்., பார்ப்போருக்கும் கோளாறு வரும் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், மருத்துவ ரீதியாக வாய்ப்பு உள்ளது என்பது மட்டும் நிச்சயம். இந்த பாதிப்புக்கு, ‘கார்பல் டன்னல் சின்ட்ரோம்’ என்று பெயர். கம்ப்யூட்டரில், கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி வேலை செய்வோருக்கும், அதிகமாக, ‘மவுஸ்’ பிடித்து வேலை செய்வோருக்கும் இந்த கோளாறு வரும். நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்பவராக இருந்தால், இந்த அனுபவம் புரியும். எப்போதும் கீ போர்டில் கை விரல்களை வைத்தபடி, ‘டைப்’ செய்தும், ‘மவுஸ்’ பிடித்தும் கொண்டிருந்தால், கை விரல்களில் உள்ள நரம்புகள் பாதிக்கும்; ரத்த ஓட்டம் சீராக இருக்காது. முழங்கையில் இருந்து கை விரல்களில் நடுப்பகுதியில் ஒரு நரம்பு போகும். அதாவது, சாலையின் நடுவே எப்படி தடுப்பு போடப்பட்டுள்ளதோ, அப்படி இந்த நரம்பு போகும். அடிக்கடி கம்ப்யூட்டர், ‘மவுஸ்’ பிடிப்பதால், மொபைல் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதால் இந்த நரம்பு பலவீனம் அடையும். ரத்த ஓட்டம் பாதித்து, திடீரென மரத்துப் போகும். இதனால், கை விரல்களில் உணர்ச்சியே இருக்காது; அப்புறம், மொபைல் போன் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் கை விரல்களால் பிடிக்கவே முடியாமல் போய் விடும். இதற்கு தீர்வு என்ன? அறுவை சிகிச்சை ஒன்று தான். அறுவை சிகிச்சை செய்த பின், மொபைல் போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும். மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொண்டால், இந்த பிரச்னைகள் எல்லாம் வராது. மொபைல் போன் எஸ்.எம்.எஸ்.,களில் வரம்பு மீறும் போது, கை விரல்களில் ஒரு வித நமைச்சல் ஏற்படும். உள்ளங்கை அரிக்கும்; போகப் போக ஒரு வித தடிப்பு உணர்வு ஏற்படும். கடைசியில் உணர்ச்சியே இல்லாமல் போய் விடும். கை விரல்கள் ஏதோ சம்பந்தம் இல்லாமல் ஒட்டிக் கொண்டிருப்பதை போல, எதற்கும் பயன்படாமல் போய்விடும். எஸ்.எம்.எஸ்., மூலம் கைவிரல் மரத்துப் போய், அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆனீஸ் லெவிட்ஸ் தன் அனுபவத்தை கூறுகிறார்: எனக்கு மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., தருவது என்றால் மிகவும் பிடிக்கும். என் தோழிகள் எல்லாரும் தகவல் பரிமாறுவதே அதில் தான். போனில் பேசாமல், இப்படி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தோம். நான் ஒரு நாளைக்கு 100,’கீ’க்கு மேல் எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்ப, விரல்களால், ‘டைப்’ செய்வேன். அப்படி செய்த நான், ஒரு நாள், காலை எழுந்ததும் கைவிரல்களில் ஒருவித நமைச்சல் காணப்பட்டது. போகப் போக, விரல்களில் உணர்ச்சியே இல்லாமல் போய் விட்டது. அடுத்த சில மணி நேரத்தில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டபோது, விரல்களில் சூடு பட்டும், எதுவும் உணர்வே தெரியவில்லை. டாக்டரிடம் காட்டியதற்கு, உடனே அறுவை சிகிச்சை செய்து, கை விரல் நரம்பில் உணர்ச்சியூட்ட முடியும் என்று கூறினார். அறுவை சிகிச்சை செய்த பிறகு தான், என்னால், மொபைல் போனை கைவிரல்களால் பிடிக்க முடிகிறது. — இவ்வாறு கூறிய ஆனீசிடம், ‘இப்போது எஸ்.எம்.எஸ்., அனுப்ப முடிகிறதா?’ என்று கேட்டது தான் தாமதம், ‘எஸ்.எம்.எஸ்.,சா… அதை மறந்து ரொம்ப நாளாச்சு; எதுவாக இருந்தாலும், தோழிகளிடம் போனில் சில நொடிகள் பேசுவேன்…’ என்று, ‘பளீச்’சென சொன்னார். என்ன… நீங்க எஸ்.எம்.எஸ்., விரும்பியா? அப்படீன்னா, எச்சரிக்கையாக இருங்க! |

Sunday, 26 December 2010
நீங்கள் மொபைல் போனில் அடிக்கடி எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் ஆர்வம் கொண்டவரா? : வேண்டாம் விபரீதம்!
கூகுள் கேம்ப்
இணைய இணைப்பு இல்லாதபோது கூகுள் மேப்ஸ் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது? கூகுள் மேப்ஸில் ஒரு முக்கியமான இடத்திற்கு மேப் கண்டறிந்து, அதனை சேவ் செய்து, அதனை இன்டர்நெட் இணைப்பு கிடைக்காதபோது எப்படி பார்ப்பது? இந்த இடத்தில் தான் நமக்கு ஜிமேப் கேட்சர் (Gmap Catcher) என்னும் அப்ளிகேஷன் நமக்கு உதவுகிறது. இதனை http://code.google.com /p/gmapcatcher என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்திலிருந்து டவுண்ட்லோட் செய்து, பின் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும். பின் அதனை இயக்கவும். இது இயங்குகையில், நீங்கள் எந்த ஊருக்கான மேப் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த ஊரின் பெயரை என்டர் செய்திட வேண்டும். பின்னர் ஆன்லைனில் சென்று குறிப்பிட்ட மேப்பைப் பெற, இந்த புரோகிராம் உங்கள் அனுமதி கேட்கும். இதற்கு 'Yes' என்பதில் கிளிக் செய்திட, உடனே அந்த நகரத்திற்கான மேப் ஜிமேப் கேட்சர் விண்டோவில் கிடைக்கும். இதன் பின்னர் அதனை டவுண்லோட் செய்திட நாம் கட்டளை கொடுத்தவுடன், அந்த மேப் டவுண்லோட் செய்யப்பட்டு, உங்கள் சிஸ்டத்தில் சேவ் செய்யப்படும். மேப்பிற்கான பூகோள ரேகைக் குறியீடுகள் (latitude, longitude) ஏரியா, ஸூம் செட்டிங்ஸ் ஆகிய தகவல்களும், மேப்புடன் பதியப்படும். இது டவுண்லோட் செய்யப்பட்டுவிட்டால், இந்த மேப்பினை அடுத்துப் பார்க்க, இன்டர்நெட் இணைப்பு தேவைப்படாது. இல்லாமலேயே ஜிமேப் கேட்சர் உதவியுடன் காணலாம். ஜிமேப் கேட்சர் புரோகிராமினை விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களிலும் இயக்கலாம். |
Mobile Phone பாதுகாப்பு வழிகள்
![]() 2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம். 3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன. 4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது. 6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது. 7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும். 8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும். 10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. 11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும். 12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம். 13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும். 14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும். 15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள். 16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது. |
Subscribe to:
Posts (Atom)