மின்னஞ்சல் வந்தால் டெஸ்க்டாப்பில் அலெட் செய்யும் டூல் பற்றி இந்த இணைப்பில் குறிப்பிட்டிருந்தேன். தற்போது ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருமுறையும் அதை திறந்து பார்க்காமல் புதிய மின்னஞ்சல் வந்ததுமே டெஸ்க்டாப்பில் தெரிவிக்கும் டூல் பற்றி பார்க்கலாம்.
ஜிமெயில் பீப்பர் என்ற இந்த டூலை தரவிறக்கம் செய்து நிறுவியதுமே அதில் ஜிமெயில் கணக்கின் விபரங்களை கொடுத்து சேமித்துவிட்டால் போதுமானது.
பின்னர் சத்தமில்லாமல் சிஸ்டம் டிரேயில் அமர்ந்து கொள்ளும் இந்த மென்பொருள் புதிய மின்னஞ்சல் வந்ததுமே அலெட் செய்துவிடும். [Image]
அதிக ஆப்ஸன்களை தந்து சிக்கல் ஏற்படுத்துவதை விட குறைவான ஆப்ஸன்களுடன் மிகச் சிம்பிளாக இயங்குகிறது இந்த டூல்.
டவுண்லோட் செய்வதற்கு http://gmail-peeper.co.cc/