Thursday, 27 January 2011

கணினியில் கோப்புக்களை தற்காலிகமாக சேமித்து பயன்படுத்துவதற்கு.



கணினியில் ஒழுங்கில்லாமல் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களை சேர்த்து தற்காலிகமாக ஒரு இடத்தில் வைத்து
அவற்றை அழித்துவிட அல்லது வேறு லொகேஷனுக்கு காப்பி செய்யும் பயன்பாட்டுக்கு உதவுவதே FileBucket  எனும் இலவச டூலாகும்.

இந்த டூலின் மூலம் கோப்புக்களை அழித்தல் மற்றும் பிரதி எடுத்தல் போன்ற செயற்பாடுகளுடன் அவற்றிக்கான சாட் கட் ஐ உருவாக்கவும் முடியும். கோப்புக்களை ஒழுங்கில்லாமல் சேமிப்பவர்கள் அவற்றை ஒழுங்குபடுத்த இந்த போர்ட்டபில் மென்பொருள் நிச்சயம் உபயோகம் தரும்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே

யுடோரன்டில் கோப்புக்கள் எந்த நாடுகளிலிருந்து தரவிறக்கப்படுகிறது?




மென்பொருளை பயன்படுத்தி கோப்புக்களை தரவிறக்குவீர்கள். அவை எந்த எந்த நாடுகளிலிருந்து டவுண்லோட்
அல்லது அப்லோட் ஆகின்றன என்பதை கூகுள் மேப் உதவியுடன் இலகுவாக அறிய முடியும்.

இதற்கு umap என்ற அப்பிளிகேஷனை பயன்படுத்த வேண்டும்.

1.யு டோரனை நிறுவி விட்டு பின்னர்

2.அதில் sidebar இல் இருக்கும் Apps என்ற section இல் umap ஐ தேர்வு செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.

3.இனி sidebar இல் umap ஐ தேர்வு செய்தால் அங்கிருந்து இலகுவாக நாடுகள் பற்றிய விபரங்களை தொகுத்து பார்வையிட முடியும்.
யூடோரன்ட் டவுண்லோட் இங்கே
யூடோரன்ட் பற்றி அறியாதவர்கள் இங்கே செல்லுங்கள்.

கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்


கணினியின் முகப்பில்(desktop) பேஸ்புக்கை பயன்படுத்துவது எவ்வாறு?



இணைய உலாவி மூலம் அடிக்கடி பேஸ்புக் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுபவரே நீங்கள்,
அவ்வாறெனில் இனிமேல் கணினியின் முகப்பு திரையிலேயே  பேஸ்புக்கை கொண்டுவரக்கூடிய Facebook Desktop என்கின்ற மென்பொருளை பயன்படுத்துங்கள்.
இவ்வாறு செய்தால் இனிமேல் பேஸ்புக் ஐ பார்வையிடுவதற்காக இணைய உலாவியை திறக்கவே தேவையில்லை.டெக்ஸ்டாப்பில் பேஸ்புக் இல் வருகின்ற அப்டேட்களை காட்டுமாறு செய்துவிடலாம்.
Facebook Desktop  என்பது பேஸ்புக்கை கணினியில் பயன்படுத்த உதவும் அளவில் சிறிய டெக்ஸ்டாப் அப்பிளிகேஷனாகும்.
மெசெஞ்சர் சாப்ட்வேர்கள் போலவே தொழிற்ப்படும் இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து பேஸ்புக்கின் ஸ்டீரிமில் புதிதாக என்ன நடைபெற்றது என்பதை அலெட் செய்கிறது.அடோப் ஏர் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த மென்பொருள்.

பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட், புதிய வால் போஸ்ட், நண்பராக சேர விரும்புவர்கள் போன்றவற்றின் விபரங்களை காட்டுகின்றது இந்த மென்பொருள் ஆனால் பேஸ்புக் பேஜ்களை பற்றிய தகவல்களை காட்டவில்லை.

டவுண்லோட்

உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் "டேப்ளட் பிசி(Tablet PC)"


கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது.
ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது.
எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது.
இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில்