Monday, 13 December 2010

ஹிந்திக்குப் போகிறார் இலியானா



தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ள இலியானா விரைவில் ஹிந்தி படத்தில் நடிக்கிறார். தமிழில் கேடி படத்தில் அறிமுகமானவர் இலியானா.
ஆனால் அந்தப் படம் ஓடாததால் தெலுங்குப் பக்கம் சென்றார். முன்னணி ஹீரோக்களுடன் இவர் ஜோடி படங்கள் சூப்பர் ஹிட்.
இதனால் விரைவிலேயே அவர் நம்பர் ஒன் இடத்துக்குச் சென்றார். தற்போது ஹிந்தியில் நடிக்கவுள்ளார். அனுராக் பாசு இயக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தில் நடிக்க இலியானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இலியானா கூறியதாவது:
இதுவரை பல ஹிந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதிலும், இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூரின் நாயகியாக நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார் அவர்.

இசைக்கருவிகள் ஏதுமின்றி ஐ.ஃபோனிலும் ஐ. பேடிலும் இசை



உலகம், கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புதுமை என்று கொண்டாடிய காலம் மாறி இன்று அந்த புதுமையிலும் புதுமை செய்திருக்கிறார்கள்.இசைக்கருவிகள் ஏதுமின்றி விட்ஜெட்கள் எனப்படும் அமைப்புகளால் ஐ.ஃபோன் மற்றும் ஐ. பேட் களில் இசையை மீட்டி அதிசயக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்காவின், ஜியார்ஜியாவை சார்ந்த North Point Community Church குழுவினர்.
இதற்கென்றே இவர்கள் i band என்ற இசைக்குழுவினையும் வைத்திருக்கிறார்கள். மொபைல் ஃபோன் கண்டுபிடித்ததையே எப்படி கண்டுபிடித்தார்கள் என நினைக்கையில் தலைசுற்றும் போது i phone, i pad களில் widget வைப்பதற்கு எப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் தலை மேலும் சுற்றுகிறது. அதிசயிக்க வைக்கிறார்கள்.

பெண் துணையின்றி ஆண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்



குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றனர்.ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண் துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது “ஸ்டெம்செல்” மூலம் பல அரியவகை அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. “ஸ்டெம்செல்” சிகிச்சையின் மூலம் கொடிய நோய்கள் கூட குணப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அதிநவீன “ஸ்டெம் செல்” தொழிற் நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகள் மூலம் குட்டி எலிகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். டெக்சாஸ் இனப்பெருக்க விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் மனிதர்களிலும் பெண் துணையின்றி ஆண்களே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போன்று ஆண்கள் இல்லாமல் பெண்களே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இது ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு வசதியாக அமையும்.