
Saturday, 15 January 2011
இணைய வேகம் இணைய சேவை வழங்குனரால் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிவதற்கு..
இணைய பாவனையில் வீடியோ பார்க்கும் போது அல்லது டோரன்ஸ் மூலம் டவுண்லோட் செய்யும் போது திடீரென இணைய வேகம் குறைந்ததை அடிக்கடி உணருபவாரா நீங்கள் அவ்வாறாயின் இந்த தளம் மூலம் ஏன் அவ்வாறு நிகழ்கிறது என்பதை கண்டறியலாம்.
மின்னஞ்சல் வந்தால் டெஸ்க்டாப்பில் தெரியப்படுத்தும் மென்பொருள் (Desktop email notification)
பல மின்னஞ்சல் கணக்குகளில் ஒவ்வொருமுறையும் லாகின் செய்து நேரத்தை வீணாக்காமல் வருகின்ற மின்னஞ்சல் பற்றி கணனியின் முகப்புத்திரையிலேயே தெரியப்படுத்துகின்ற டூல் தான் Pop Peeper என்ற மென்பொருளாகும். உபயோகம் தரும் நிறைய ஆப்ஸன்களை இந்த டூலை நிறுவும் போதே ஒழுங்கமைத்து கொள்ளலாம். முதலில் ஸ்டார்ட் விஸாட் இல் மின்னஞ்சல் கணக்கின் விபரங்களை தரலாம். அதன் பின்னர் கிடைக்கும் பிரதான விண்டோவில் நீங்கள் கன்விகர் செய்த எல்லா மின்னஞ்சல் கணக்குகளின் மின்னஞ்சல்களை ஒரே தரத்தில் பார்வையிடலாம்.
பிரபலமான எல்லா மின்னஞ்சல் சேவைகளுக்கும் இசைவாக்கம் பெற்றுள்ள இந்த மென்பொருள் POP, IMAP மற்றும் SMTP புரோட்டோகோல் களுக்கும் சப்போட் செய்கிறது.
இதிலிருக்கும் இமெயில் வியூவர் மின்னஞ்சல்களை பார்வையிடலாம்.
நிச்சயம் அலுவலக கணனி பாவனையாளர்களுக்கு பயன்படும் டூலாக இது அமையும். பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் அவை மற்றவர்களுக்கும் பயன்படலாம்.
வை-பை கதிர்கள் மனிதர்களை தாக்குகின்றதா?
![]() இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கையடக்கத்தொலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். |
Subscribe to:
Posts (Atom)