Friday, 7 January 2011

ஒரே தடவையில் சோசல் தளங்களில் படங்களை பகிர்வதற்க


பேஸ்புக், மைபேஸ், டுவிட்டர், பிகாஸா, Flickr, Photobucket போன்றவற்றில் படங்களை drag & drop  முறையில் அப்லோட் செய்வதற்கு வசதிசெய்யும்

வெப் அப்பிளிகேஷன் Dropico  ஆகும்.

முதலில் இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்த பின்னர், சப்போட் செய்யும் சோசல் நெட்வேர்க் அனைத்தும் லிஸ்ட் செய்யப்படும். அதில் ஒரே கிளிக்கில் ஆன் செய்துவிட முடியும்.

மொபைலில் இருந்து இந்த அப்பிளிகேஷனை பயன்படுத்த முடியும். சோசல் தளங்களில் படத்தை பகிர்வதற்கு, படத்தை drag செய்து குறிப்பிட்ட அல்பத்தில் அப்லோட் செய்துவிட வேண்டும்.

விசிட் செய்வதற்கு இங்கே
http://www.dropico.com
/

கணினியில் ஒரே சாயலில் சேமிக்கப்பட்டிருக்கும் நகல் படங்களை கண்டறியும் மென்பொருள்



உங்கள் கணினியில் பெரும் தொகையான படங்களை சேமித்துவைத்திருப்பீர்களாயின் அவற்றில் சில இருமுறை வெவ்வேறு அளவுகளில் சேமிக்கப்பட்டிருக்கலாம்.
இவற்றை எவ்வாறு கண்டறிவது? உதவுகிறது Duplicate Photo Finder என்ற மென்பொருள்.இந்த மென்பொருள் கணினியிலுள்ள ஒரேசாயல் படங்களையும் டூப்பிளிகேட் படங்களையும் தேடி ஒப்பிட்டு காட்டுகிறது அதில் நீங்கள் எது தேவையோ அதை சேமித்துவிட்டு மற்றையதை அழித்துவிடும் வசதியும் உண்டு.
குறிப்பிட்ட பால்டரை தேர்வு செய்ததும் அதை ஸ்கான் செய்து எதை சேமிப்பது என்பதை இலகுவாக முடிவு செய்யும் வகையில் Similarity percentage ஐ காட்டுகிறது.

டவுண்லோட் செய்வதற்கு கீழுள்ள இணைப்பிற்கு செல்லுங்கள்

இணைப்பு

கூரிய பற்களைக்கொண்ட பறக்கும் தவளைகள்: வியட்நாமில் கண்டுபிடிப்பு





வழமைக்கு மாறான புதிய வகை தவளை வகையொன்றினை அவுஸ்திரேலிய விஞ்ஞானியொருவர் தென் வியட்நாம் காடுகளில் கண்டுபிடித்துள்ளார்.
இத் தவளையினத்துக்கு 'வெம்பயர் பிளையிங் புரக்'என பெயரிட்டுள்ளனர்.அதாவது பறக்கும், இரத்தம் குடிக்கும் தவளையாகும்.
இத்தவளைகள் மரத்திற்கு மரம் தனது கால்களில் காணப்படும் மென்சவ்வின் உதவியுடன் பறப்பதாகவும் அவ் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தவளை இனத்தின் குஞ்சுகளானது மிகவும் கூரிய பற்களை உடையன.
இவ்வினமானது அடர்ந்த காடுகளில் உள்ள சிறிய நீர் நிலைகளிலும், மரப் பொந்துகளிலுமே வாழ்கின்றன.
இத்தவளை இனம் பற்றி தற்போதே அறியக்கிடைத்திருப்பதாகவும் இது தொடர்பில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.