
Sunday, 16 January 2011
புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ள facebook group
facebook இணைய தளத்தில் அன்றாடம் பல விடயங்களை எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றோம். இப்படி நாம் ஒருவிடயத்தை பகிரும் போது அது எமது அனைத்து நண்பர்களும் பார்த்து வந்தார்கள். அந்தப் பகிர்தலில் பல குறைபாடுகள், ப்ரைவசி பிரச்சினைகள் காணப்படுவதாக பலரும் முறைப்பாடுகளை மேற்கொண்டுவந்தார்கள். அதற்கு பதிலழிக்கும் வகையில் இந்த புதிய Groups வெளிவந்துள்ளது. இப்போது உங்கள் குடும்ப photo வை உங்களது உறவினர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பகிர்ந்து கொள்ளலாம். இப்போது ஒரு இணைய தள முகவரியினை உங்கள் நெருங்கிய நண்பர்களிடையே மட்டும் பகிரலாம். மேலும் நாங்கள் குழுவாக சேர்ந்து chat ம் பண்ணலாம். உங்கள் நண்பர்களிடையே குழுக்களை உருவாக்கி எமது தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை இந்த புதிய Groups தந்துள்ளது. பலரும் எதிர்பார்த்த ப்ரைவசி இங்கு அதிகமாகவே காணப்படுகிறது. நான் சொல்வதைவிட நீங்கள் செய்து பார்க்கும் போது இலகுவாக புரியக்கூடியதாக இருக்கும். இப்போதோ உங்கள் நண்பர்களிடையே ஒரு குழுவினை உருவாக்கி பயன்படுத்திப்பாருங்கள்.
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். 15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும்.
இவற்றை எளிதில் குணப்படுத்தலாம். 10 சதவீதம் பேருக்கு இதயத்தில், “மைட்டிரல் வால்வு புரலாப்ஸ்’ ஆகலாம். கிராமப்புற, ஏழ்மை நிலையிலுள்ள இளம் பெண்களுக்கு, “மைட்டிரல் ஸ்டினோசிஸ்’ என்ற வால்வு நோய் இருக்கலாம். பெரும்பாலும் குடும்ப, சமூக ரீதியாக குழப்பத்தால் ஏற்படும் விளைவுகள் இவை.
25 முதல் 45 வயது வரை: திருமணம் செய்தவுடன் புகுந்த வீட்டில் ஏற்படும் கலாசார குடும்ப சூழ்நிலை மாற்றத்தினால் ஏற்படும் மனமாற்றம் பயம், வெறுப்பு, படப்படப்பு ஏற்பட்டு, நாளடைவில் ரத்த அழுத்தம் ஏற்படலாம். வேலை செய்யும் பெண்கள், குழந்தைகள் பெற்றவுடன், உடலில் ஏற்படும் மாற்றங்கள், குழந்தைகள் வளர்ப்பு, அலுவலகம், குடும்பம் இரண்டையும் பராமரிப்பதில் சிக்கல் ஆகியவற்றால், மன உளைச்சல், படப்படப்பு ஏற்படும். குடும்ப பாரம்பரிய வியாதி இருந்தால், அதுவும் வரலாம்.
Subscribe to:
Posts (Atom)