Tuesday, 4 January 2011

டைட்டானிக் கப்பல் சிதைவுகளை.. வேகமாக அழிக்கும் புது பாக்டீரியா



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

டொரன்டோ: 1912ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், அட்லான்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி 2223 பயணிகளுடன் விபத்தில் சிக்கியது. இதில் 706 பயணிகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற அனைவரும் இறந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வை, 98 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதன் சிதைந்து போன எஞ்சிய பாகங்களின் மூலம் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இவை அட்லான்டிக் கடல் பகுதியில் காட்சிப்பொருளாக வைக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் டைடானிக் கப்பலின் பாகங்கள் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. அதில் இருந்து சேகரிக்கப்பட்ட நுண்ணுயிரியின் டிஎன்ஏ பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஆரஞ்சு நிறத்தில் உள்ள புதிய வகை பாக்டீரியா இரும்பை வேகமாக அழித்து வருவது தெரிந்தது.

இதனால் மிகவிரைவில் டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் முற்றிலும் அழிந்து தடயமின்றி போய் விடும் என்று கவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். டல்ஹொஸ் ஹாலிபாக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவில் உள்ள நோவா ஸ்காட்டியா பல்கலைக்கழகம், ஸ்பெயின் செவிலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து ஹென்ரீடா மான், பவ்லீன் கோர் ஆகியோர் தலைமையில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அதில் கப்பலின் துருவை பொடியாக்கி அழித்து வரும் பாக்டீரியா முற்றிலும் புதிய வகை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது, ‘இரும்பு துருப்பிடித்து மண்ணுடன் கலப்பதுதான் இயற்கை நியதி. இது கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்களான பாக்டீரியாக்கள் மூலம் சாத்தியமாகிறது. இது மிகவும் மெதுவாகவே நடைபெறும். ஆனால் புதுவகை பாக்டீரியா, டைட்டானிக் கப்பல் பாகங்களை வேகமாக அழித்து வருகிறது.

அந்த புது பாக்டீரியா இரும்பை சிதைப்பதில் அதிக சக்தி வாய்ந்தது என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது. இரும்பை அழிக்கும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உள்ளன. இருப்பினும் புதிய பாக்டீரியா அதிவேகமாக செயல்படுகிறது. அதிக பட்சமாக இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை மட்டுமே இதன் சிதைந்த பாகங்கள் இருக்கும்Õ என்று கவலையோடு சொல்கிறார்கள்.

தவறுதலாக கம்போஸ் செய்து அனுப்பிய மின்னஞ்சலை உடனே தடுத்து நிறுத்த

ஜிமெயிலில் தவறுதலாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலை மீளப்பெறுவது எப்படி என முன்னர் பார்வையிட்டோம்.
இப்போது ஏனைய மின்னஞ்சல் சேவைகளில் இருந்து தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை எவ்வாறு நிறுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

முக்கியமான மின்னஞ்சல்களை அனுப்பும் போது அட்டாச்மென்ட் கோப்பை இணைக்க மறந்தால் அல்லது எழுத்துப்பிழைகள் வரும்போது தவறுதலான இணைப்பை தருகின்ற போது காரமான சொற்களை பிரயோகித்தல் போன்ற சந்தர்ப்பங்களில் மின்னஞ்சலை பெறுபவர் திறந்து படிக்கமுன் மீளப்பெறுவதற்கு அல்லது அனுப்புவதை உடனே நிறுத்துவதற்கு விரும்புவீர்கள்.

எவ்வாறு செய்வது. Send பட்டனை தட்டியதும் சில செக்கன்களில் உடனே தடுக்க வேண்டுமாயின் உடனடியாக உங்கள் கணணியின் ஈதர்நெட் கேபிளை பிடுங்கிவிடுங்கள்.

அவுட்லுக் பயன்படுத்துபவர்களாயின் கீழ் வலப்பக்கத்தில் இருக்கும் work offline ஐகானை தேர்வு செய்ய வேண்டும். ஈதர்நெட் கேபிள் இல்லையா உடனே ரூட்டரை off செய்துவிடுங்கள். அல்லது கணணிக்கான மின்சாரத்தை எவ்வகையிலாவது உடனே நிறுத்தவேண்டும்.

இதைவிட உங்களுக்கு தெரிந்த வேறு முறைகள் இருப்பின் இங்கே பகிரலாமே அவை மற்றவர்களுக்கும் பயன்படுமல்லவா?