Saturday, 8 January 2011

பேஸ்புக் போட்டியாக டயஸ்போரா



 
  பேஸ்புக் நாம் அனைவரும் அறிந்ததும் எம்மில் பலர் உபயோகித்து வருவதுமான ஒரு சமூக வலைப் பின்னல் தளம்.

இந்நிலையில் பேஸ்புக்கிற்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் புதிய சமூக வலைப்பின்னல் தளமொன்று செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இத்தளமானது ' டயஸ்போரா ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்படி தளத்தினை உருவாக்குவதற்காக நியூயோர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் 200,000 அமெரிக்க டொலர் பணத்தினைத் திரட்டினர்.

பேஸ்புக்கின் உருவாக்குனர் மார்க் ஸுக்கர்பேர்க்கும் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தார் என்பது மேலதிகத் தகவலாகும்.

இத்தளத்தின் தொழில்நுட்ப அம்சங்களை நோக்குமிடத்து பேஸ்புக்கின் அடிப்படை அம்சங்களான மல்டிமீடியா செயாரிங், ஸ்டேடஸ் அப்டேட், செட்டிங் வசதி என்பவற்றைக் கொண்டுள்ளது.

இதனுடன் வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினையும், இன்ஸ்டன்ட் மெசேஜிங் வசதியினையும் கொண்டமையவுள்ளது.

இதன் சிறப்பம்சம் இது ' ஓப்பன் சோர்ஸ் ' என்பதுதான். இதன் காரணமாக, இத்தளத்தின் பாவனையாளர்கள் தங்களின் அனைத்து விதமான தகவல்கள் மற்றும் செயற்பாடுகளைத் தாங்களே நிர்வகிக்க முடியும்.

 

ஜிமெயில் 'ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' (காணொளி இணைப்பு) _




  கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail) என்பது பிரபல மின்னஞ்சல் சேவை. பல்வேறு நவீன வசதிகளை தமது பாவனையாளர்களுக்கு கூகுள் வழங்கி வருகிறது.

தற்போது கூகுள் தனது ஜிமெயில் பாவனையாளர்களுக்குப் புதியதொரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதியானது ' ப்ரயோரட்டி இன்பொக்ஸ்' என அழைக்கப்படுகின்றது.

இது பாவனையாளர் ஒருவர் பெற்றுக் கொள்ளும் மின்னஞ்சல்களை அதன் முக்கியத்துவ அடிப்படையில் வேறுபடுத்துவதாகும்..

இதன் போது பாவனையாளரின் இன்பொக்ஸ் 3 பிரிவுகளாக பிரிக்கப்படும்.

முக்கியமான மின்னஞ்சல்கள் 'இம்போர்ட்டன்ட் அண்ட் அன்ரெட்' பிரிவுக்குள் உள்ளடக்கப்படும். மற்றைய மின்னஞ்சல்கள் அடுத்தடுத்த பிரிவுகளுக்குள் சேர்க்கப்படும்.

இம்மின்னஞ்சல்களை வேறுபடுத்துவதற்காக ஜிமெயில் சில விசேட சமிக்ஞைகளை உபயோகப்படுத்துகின்றது.

நாம் அதிகமாக எவரிடமிருந்து மின்னஞ்சல்களினை பெறுகின்றோம் மற்றும் பதிலளிக்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இத்தொழிற்பாடு நடைபெறுகின்றது.

மேலும் மின்னஞ்சல் கணக்கில் காணப்படும் '+' பட்டன் மூலம் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களையும் ' - ' பட்டன் மூலம் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவற்றையும் குறிப்பிட்டுக் கொள்வதன் மூலமும் மின்னஞ்சல்களை வேறுபடுத்திக் கொள்ளலாம்.

கூகுள் நிறுவனமானது கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாகத் தனது ஜிமெயில் பாவனையாளருக்கு அறிமுகப்படுத்திவரும் 3ஆவது நவீன வசதி இதுவாகும்.

தொடர்புகளை நிர்வகிக்கும் ( கொன்டாக்ட் வசதி) வசதி, அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி என்பனவே அவையாகும்.

 

பேஸ்புக் - டுவிட்டர் நிறுவனங்களின் புதிய எதிரி _



 
  பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலை பின்னல் தளங்களில் அதிக நேரம் விரயம் செய்யும் ஊழியர்களினால் பிரித்தானிய நிறுவனங்களுக்கு பில்லியனளவில் பணவிரயமேற்படுவதாக ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

பிரித்தானிய இணையத்தளமொன்று நடத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவின்படி பிரித்தானியாவின் 34 மில்லியன் ஊழியப்படையில் 2 மில்லியன் பேர் 1 மணித்தியாலத்திற்கும் அதிகமான தங்களது வேலை நேரத்தை மேற்படி சமூக வலை பின்ணல் தளங்களில் செலவிடுவதாக அந்த இணையத்தளம் தெரிவிக்கின்றது. இது மொத்த வேலை நேரத்தில் 8 இல் 1 பங்காகும்.

மேற்படி இணையதளத்தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியின் கருத்துப்படி ஐக்கிய இராச்சியத்தில் ஊழியர்கள் மிகவும் அதிக நேரத்தினை சமூக வலை பின்னல் தளங்களில் செலவிடுவதாகவும், இது நிறுவனங்களினால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் இது ஊழியர்களின் ஆக்கத்திறனில் மறைமுக பாதிப்பை எற்படுத்துவதாகவும் இதனால் நிறுவனங்கள் பல்வேறு நட்டங்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய செயற்பாட்டினால் நிறுவனங்களுக்கு 14 பில்லியன் பவுண்கள் வரை பணவிரயமேற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவ்வாய்வறிக்கையின்படி பிரித்தானிய ஊழியர்களில் 55% வீதத்திற்கும் அதிகமானவர்கள் தாம் தமது வேலைநேரங்களின் மேற்படி தளங்களினை உபயோகிப்பதாக வெளிப்படையாகth தெரிவிப்பதாகவும் இதில் பலர் மிகவும் அதிக நேரம் செலவிடுவதாகவும் அவ் அறிக்கை தெரிவிக்கின்றது.

இப்புதிய சவாலனது நிறுவனங்களுக்கு பாரிய அடியென தெரிவிக்கப்படுகின்றது.

'கூகுள் மீ' இரகசிய தளம்! : உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னுமில்லை _



 



  ' கூகுள் மீ ' என்ற சமூக வலைப்பின்னல் தளமொன்றினை கூகுள் இரகசியமாக உருவாக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம்.

கூகுள் இது தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் தனது மற்றைய சேவைகளான 'ஜீ மெயில்' எனப்படும் மின்னஞ்சல் கணக்கு, கூகுள் பஸ் மற்றும் அதன் மற்றைய வெளியீடுகளை அடிப்படையாகக் கொண்டும் ' ஸ்லைட் ' மற்றும் ' சிங்கா ' ஆகியவற்றினை உபயோகப்படுத்தியும் தனது சமூக வலைப் பின்னல் தளத்தினை உருவாக்கி வருவதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.

' ஸ்லைட் ' நிறுவனமானது மற்றைய சமூக வலைப்பின்னல் தளங்களான ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு மென் பொருட்களை உருவாக்கிய நிறுவனம்.

இந் நிறுவனத்தை கடந்த 4ஆம் திகதி கூகுள் விலைக்கு வாங்கியது.

மேலும் ' சிங்கா ' எனப்படும் ' மைஸ்பேஸ் ' மற்றும் 'பேஸ்புக்' ஆகியவற்றுக்கு இயங்குதளம் சார்ந்த விளையாட்டுக்களை உருவாக்கிய நிறுவனத்தில் கூகுள் 100 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கூகுளின் இத்தகைய நடவடிக்கைகளானது, பாவனையாளர்களுக்குப் புது வகையான அனுபவத்தினை தரும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இத்தளத்தில் கணினி விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கூகுளின் மற்றைய சேவைகளான கூகுள் 'எப்ஸ்', கூகுள் 'வொயிஸ்', கூகுள் 'ரீடர்' மற்றும் 'ஐ' கூகுள் போன்றவற்றின் பாவனையாளர்களைத் தனது கூகுள் 'மீ' தளத்திற்கான இலக்காக கூகுள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் கூகுள் 'பஸ்', 'ஓர்குட்' ஆகிய சமூக வலைபின்னல் தளங்களை உருவாக்கி தோல்வி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'பேஸ்புக்'கின் பிரமாண்ட வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மற்றைய தளங்களின் எண்ணிக்கை என்பன கூகுளின் இன்னும் அறிவிக்கப்படாத கூகுள் 'மீ' தளத்தின் வெற்றிக்குப் பெரும் சவால்களாக விளங்குகின்றன. 

மிகவும் அறிந்து கொள்ள வேண்டிய சோஷியல் நெட்வார்க் _



 
  கற்றுத்தேர்ந்தவர்களோடு நாம் பழகினால், நாமும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் நாம் கற்றதையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இதற்கு இன்டர்நெட்டில் எங்கு செல்வது? நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள். சரியான கருத்துரைகளை (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி? இந்த குறையைப் போக்கும் வகையில், கற்றவர்கள் கலந்துரையாடி, தங்களுக்கு தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி www.wepapers.com. இது ஒரு கல்வியாளர்களின் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லலாம்.

இதில், பெரும்பாலும் பல்கலை மற்றும் கல்லுõரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இடம்பெறுகின்றனர். இதில் கலந்து கொள்வதன் மூலம் அதில் உள்ள அறிவு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கலாம். நமக்கு தெரிந்ததை இதில் பதிப்பிக்கலாம். ஆய்வுச் சுருக்கங்கள் (abstracts)கட்டுரைகள், உரைக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவை இங்கு பெருமளவில் இடம்பெற்றுள்ளன.

இவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளனர். 40 வகைகளில் இவை கிடைக்கின்றன. உலகின் அனைத்து பொருட்களும் இதில் அடங்கும். இந்த கட்டுரைகள் பிளாஷ் தொழில்நுட்பத்தில் காட்டப்படுகின்றன. (யுட்யூப் மற்றும் பிற வீடியோ கிளிப்புகளைக் காட்டுவது போல) கட்டுரைகளில் சுருக்கம் அல்லது ஒரு சிறிய முன்னோட்டத்தினைப் பார்த்து, பின் அவற்றை டவுண்லோட் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்து டவுண்லோட் செய்திடலாம்.

இந்த தளத்தின் இடது பக்கம் உள்ள பிரிவில், நாங்கள் விரும்பும் கட்டுரைகள் (Papers We Like) என்று ஒரு பட்டியலில், அப்போது பதியப்பட்ட சிறந்த ஏழு கட்டுரைகள் காட்டப்படுகின்றன. நீங்களாக ஒரு பொருள் குறித்து கட்டுரை ஒன்றை தேட வேண்டும் எனில், நடுப்பக்கத்திற்குச் செல்லலாம். இங்கு உள்ள Search கட்டத்தில் பொருள் குறித்த சொல்லை டைப் செய்து "எனி (any)' என்பதில் கிளிக் செய்தால் உடன் கட்டுரைகளின் பட்டியல் கிடைக்கும்.

நிச்சயமாக, நீங்கள் அதிசயப்படத்தக்க வகையில் தேடுவதற்கு கொடுத்த பொருள் குறித்த பல்வேறு கோணத்தில் கட்டுரைகளின் தலைப்பைக் காணலாம். நீங்கள் உங்கள் கட்டுரையை இதில் பதிய வேண்டுமா? இதில் பதிவு என்பது மிக மிக எளிமையானது. பெயர், கல்லூரி அல்லது பல்கலை முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து Capcha சோதனையை முடித்தால் போதும். பின்னர் sign up செய்து உள்ளே நுழையலாம். நீங்கள் ஒரு பொருள் கற்றுக்கொடுக்க எண்ணினால், கோர்ஸ் லீடர் என்ற பிரிவின் மூலம் செல்லலாம். அல்லது உங்கள் கட்டுரையை உங்கள் மாணவர்கள் அல்லது மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து குழுவாக அமைத்திடலாம்.

கட்டுரைகளை அப்லோட் செய்வதும் மிக எளிதாக உள்ளது. அப்லோட் செய்த பின்னர், அந்த கட்டுரை குறித்த சுருக்க தகவல்களை நீங்கள் அதற்கான படிவத்தில் தர வேண்டும். கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக்கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஒர் அருமையான இணையதளம் இது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரைச் சேர்ந்த Hanan Weiskopf மற்றும் Ehud Zamir என்ற இரு மாணவர்களால் இந்த தளம் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இதற்கான நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இந்த தளத்தின் முகவரி www.wepapers.com

கணினியை வைரஸிடம் இருந்து காப்பாற்ற 10 வழிகள்




அனைவரின் கணினியிலும் எழும் பொதுவான மிக ஆபத்தான பிரச்சனை வைரஸின் தாக்கமே!...ஒரு சில நிமிடங்களில் நமது கணினியையே காலி செய்துவிடும்...பாடுபட்டு உழைத்த தகவல்கள், முக்கிய ஆவணங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம் என அனைத்தும் பாதிபடைந்து தங்கள் கணினி முழுவதும் முடக்கப்படும்.
இதற்க்கு தீர்வுதான் என்ன....பொதுவாக வைரஸையை தங்கள் கணினியில் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...ஏனெனில் அது வந்து பின்பு அதை கட்டுப்படுத்துவதும், நீக்குவதும் மிக மிக கடினம். இவற்றை தீர்ப்பதற்கான இலகுவான பத்து வழிகள்..
01. தங்கள் கணினியில் தாங்கள் செய்ய வேண்டிய மிக முக்கிய ஒன்று ஓர் சிறந்த வைரஸ் தொகுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். ஆன்டிவைரஸை நிறுவிட்டால் போதுமா! கணினியை வாரத்திற்கு ஒரு முறையாவது முழு வைரஸ் ஸ்கேன் செய்திட வேண்டும்.
02. தங்களுக்கு வரும் இ-மெயில் ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்ய மறந்து விடதிர்கள். தாங்கள் கணினிலியே இ-மெயில் மென்பொருள்களை பயன்படுத்தினால் கண்டிபாக ஸ்கேன் செய்ய வேண்டும். அதே மாறி தங்களுக்கு வரும் மெயில்களின் இணைந்து வரும் பைல்களை(ATTACHMENT FILES) கையாளுவதில் அதிக கவனம் தேவை.
03. தங்கள் கணினியில் விண்டோஸ் தரும் FIREWALL யை தவிர்த்து வேறு சில சிறந்த FIREWALL பயன்படுத்துங்கள். ஏனெனில் விண்டோஸ் சிஸ்டம் தரும் FIREWALL  அவ்வளவாக பாதுகாப்பு தருவதில்லை. உதரணமாக COMODO, ZONEALARAM போன்றவை.
04. தங்கள் ஆன்டிவைரஸ் தொகுப்பை அதாவது மென்பொருளை கணினி இயங்கும் (START UP) போதே தானாக இயங்க்கும் படி அமைத்திடவும். மேலும் பூட் ஸ்கேன் செயல்படும் படி அமைத்து விடவும்.
05. தங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும். தங்கள் நிறுவிய மென்பொருள் நிறுவிய தேதியின் நிலைமையும் பாதுகாப்பை மற்றும் பெற்றுயிருக்கும். அதன் பின்னர் பல சிறப்பு வசதிகளும், புதிய வைரஸ் தடுக்கும் திறனும் வெளியிடப்பட்டிருக்கும். தாங்கள் அப்கேர்ட் செய்வதில் புதிய திறனுடன் தங்கள் ஆண்டிவைரஸ் தொகுப்பு இயங்கும். இதனால் வைரஸ் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும். ஆண்டி வைரஸ் தொகுப்பை அடிக்கடி அடிக்கடி அப்டேட் (UPDATE) செய்யவும்.
06. இணையத் தளங்களில் பார்வையிடும் போது தோன்றும் பாப் அப் விண்டோக்களை கிளிக் செய்வதில் கவனம் கொள்ளுங்கள். மேலும் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யவா என சில அறிவிப்புகளை தாங்கள் கண்டுயிருக்கலாம், இதில் தாங்கள் கிளிக் செய்தால் போதும் தங்கள் கணினி ஸ்கேன் செய்வதும் போன்றும் வைரஸ்யிருப்பதும் போன்றும் தோன்றும். ஆனால் இங்கு தான் சில விசமிகளின் செயல் உள்ளது. இவ்வாறு தாங்கள் ஆன்லைன்யில் தங்கள் கணினியை ஸ்கேன் செய்யும் போது தங்கள் கணினிக்கு அவர்கள் வைரஸ், மால்வேர், டிரோஜன் போன்றவற்றை அனுப்பிவிடுகின்றன. இவ்வாறனவற்றை பெரும்பாலும் தவிர்க்க பாருங்கள்.
07. இணையம் மூலம் பைல்களை பதிவிறக்கும் போது நம்பிக்கை வாய்ந்த தளங்களில் இருந்து மட்டும் பைல்களை பதிவிறக்கவும். அந்த தளமானது தங்கள் தளத்தில் வைரஸ் எதுவும் இல்லை என உறுதியளிப்பு தரப்பட்டுள்ளதா என அறியவும். மேலும் .EXE OR .COM போன்ற பைல்களை பதிவிறக்குவதில் அதிக கவனம் தேவை.
08. அதே மாறி இலவசமாக கிடைக்கிறது என சந்தையில் கிடைக்கும் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் சாதனங்களை பயன்படுத்துவதில் கவனம் அதிகம் தேவை...இலவசமாக சிடிகளில் பதிந்து தரப்படும் மென்பொருட்கள், தகவல்களில் தான் அதிக வைரஸ்கள் இடம் பெறுகின்றன.
09. தங்கள் நண்பர்கள் முலம் சிடிகளை பகிர்ந்துக் கொள்வதில் கவனம் தேவை. சிடிகளின் இருக்கும் வைரஸ்கள் அவ்வளவாக தங்களை அடையாளம் காட்டிவதில்லை..தங்கள் கணினியை ஒவ்வொரு முறையும் அணைக்கும் SHUTDOWN செய்யும் போதும்..சிடி டிரைகளில் இருந்து சிடிகளை நிக்கிவிடுங்கள். எனெனில் தாங்கள் கணினியை பூட் செய்யும் போது சிடிகளில் இருக்கும் வைரஸ் தங்கள் கணினியில் பாதிப்பை ஏற்ப்படுத்தகூடும்.
10. REMOVEBLE DRIVEகளான பென்டிரைவ், மெமரிகார்டை போன்றவற்றை பயன்படுத்தும் முன்பு கவனம் தேவை..ஏனெனில் அதிகமாக வைரஸ்கள் REMOVEBLE DRIVEகள் போன்றவற்றால் தான் பரவுகின்றன. ஒவ்வொரு முறை தாங்கள் இந்த REMOVEBLE DRIVE பயன்படுத்தும் போதும் அதை ஸ்கேன் செய்யவும். REMOVEBLE DRIVE என தனி ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பயன்படுத்துங்கள்.