பல மின்னஞ்சல் கணக்குகளில் ஒவ்வொருமுறையும் லாகின் செய்து நேரத்தை வீணாக்காமல் வருகின்ற மின்னஞ்சல் பற்றி கணனியின் முகப்புத்திரையிலேயே தெரியப்படுத்துகின்ற டூல் தான் Pop Peeper என்ற மென்பொருளாகும். உபயோகம் தரும் நிறைய ஆப்ஸன்களை இந்த டூலை நிறுவும் போதே ஒழுங்கமைத்து கொள்ளலாம். முதலில் ஸ்டார்ட் விஸாட் இல் மின்னஞ்சல் கணக்கின் விபரங்களை தரலாம். அதன் பின்னர் கிடைக்கும் பிரதான விண்டோவில் நீங்கள் கன்விகர் செய்த எல்லா மின்னஞ்சல் கணக்குகளின் மின்னஞ்சல்களை ஒரே தரத்தில் பார்வையிடலாம்.
பிரபலமான எல்லா மின்னஞ்சல் சேவைகளுக்கும் இசைவாக்கம் பெற்றுள்ள இந்த மென்பொருள் POP, IMAP மற்றும் SMTP புரோட்டோகோல் களுக்கும் சப்போட் செய்கிறது.
இதிலிருக்கும் இமெயில் வியூவர் மின்னஞ்சல்களை பார்வையிடலாம்.
நிச்சயம் அலுவலக கணனி பாவனையாளர்களுக்கு பயன்படும் டூலாக இது அமையும். பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள் அவை மற்றவர்களுக்கும் பயன்படலாம்.
No comments:
Post a Comment