
உங்கள் விருப்பம் நிறைவேற மெயில் புரவுசர் என்ற பிளக்கின் ஐ பயன்படுத்தலாம். இதை நிறுவுவதன் மூலம் இன்ரநெற் எக்புளோரர், பயர்பாக்ஸ், குரோமி என நீங்கள் பயன்படுத்தும் எல்லா உலாவிகளுடனும் சேர்ந்து இயங்குகிறது.
டவுன்லோட் செய்து நிறுவியதும் ஜிமெயில் கணக்கின் விபரங்களை தந்தால் போதுமானது. அனைத்தும் இண்டெக்ஸ் செய்து தயாராகியதும், மெயில் புரவுசர் பிளகின் உலாவியின் வலது பக்கத்தில் சைட் பார் (Sidebar) ஆக அமர்ந்து இயங்கத்தொடங்கும்.
Contacts மற்றும் Files என இரு டாப் தோன்றும். அதில் ஜிமெயிலிலுள்ள காண்டக்ஸ் மற்றும் பைல்களை கையாள முடிகிறது.
குறிப்பிட்ட காண்டக்ஸை அழுத்தியதும் அதின் மேலதிகவிபரங்கள் காண்டப்படும். பைல் டாப்பில் அட்டாச்மெண்ட்டாக மின்னஞ்சலில் வந்த பைல்களை தொகுக்கப்படும்.
குறிப்பிட்ட காண்டக்ஸ் அல்லது பைல்களை வேகமாக தேடிப்பெறும் வசதி இதன் சிறப்பாகும் பயன்படுத்தி பயன்பெற்றால் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
http://mailbrowser.com/
No comments:
Post a Comment