Saturday, 1 January 2011

இன்று கூகுளில் தெரிவது - '2011' இன் ரோமன் குறியீடு


2010 இன் கடைசிநாள் மற்றும் 2011 புது வருட பிறப்புக்கு முன்னைய நாளான இன்றைய தினத்தை கூகுள் இணையத்தளமும் உற்சாகமாக
கொண்டாடுகின்றது. தனது டூடில் இலட்சிணையை ரோமன் இலக்கத்தில் 2011 ஐ குறிக்கும் விதமாக MMXI என குறிப்பிட்டுள்ளது கூகுள் டூடில்.

கிரேகொரியன் கேலண்டர் படி சனிக்கிழமை ஆரம்பிக்கிறது 2011 புதிய வருடம். மூன்றாவது மில்லேனியம் மற்றும் 21 வது நூற்றாண்டின் 11 வது வருடமாகவும் இது திகழ்கிறது. 2010s Decade (தசாப்தத்தில்) 2வது வருடமாகவும் இருக்கும் '2011', வனங்கள் காடுகளின் சர்வதேச வருடமாகவும், இராசயனவியலின் சர்வதேச வருடமாகவும் ஐ.நாவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குலகத்தினரால், நள்ளிரவு 12.00 மணிக்கு நகர்ப்புற வெளிகளில் குதூகலமாக கொண்டாடப்படும் புதுவருட பிறப்பு அமெரிக்கா முதலான நாடுகளில் இன்னமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நியூயோர்க்க் நகரில் டைம்ஸ் ஸ்கொயார் மையத்தில், 70 அடி உயரத்திலிருந்து புதுவருட பந்து (New year Ball) வீழ்த்தபப்டவிருக்கிறது. 12 மணிக்கு அங்கிருக்கும் மிகப்பெரும் கடிகாரம் அலாரம் அடித்து உற்சாகமாக புதுவருடம் வரவேற்கப்படவிருக்கிறது.

பிரான்ஸில் பாரிஸ் ஈபிள் கோபுரத்திற்கு முன்னாள் இவ்வாறு புதுவருட வரவேற்பு கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. லண்டன் பாராளுமன்ற முன்றலில் நிறுவப்பட்டுள்ள கடிகாரம் அலாரம் அடித்து புதுவருட கொண்டாட்டமும், ஜேர்மனியில் New Year's Eve Silvester ஆக இக்கொண்டாட்டமும் அந்தந்த நாட்டு மக்களால் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment