Sunday, 30 January 2011

கணினியை பயன்படுத்தாத நேரத்தில் லாக் செய்யுங்கள்.



படத்தில் காட்டப்பட்டுள்ள கணினி ஸ்கீரின் லாக் செய்யப்பட்டுள்ளது. ஆச்சரியமாகவிருக்கிறதா?

“Windows logo key + L”   ஐ அழுத்தியதும் இவ்வாறு லாக் செய்ய முடியும் அதற்காக clearlock என்ற சிறிய மென்பொருளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். கணினியை பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது திடிரென பிரேக் எடுக்க வேண்டியிருக்கும் அல்லது வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டியிருக்கும்,
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறு யாராவது வந்து உங்களின் முக்கியமான டேட்டாக்களை பார்த்திடமுடியாதவாறு செய்வதே இதன் பயன்பாடாகும். இந்த மென்பொருளில் சிறப்பு வசதியாக கணினியை லாக் செய்வதுடன் ஒரு டிரான்ஸ்பேரன்ட் ஸ்கீரினும் காட்டப்படுமாறு செய்யலாம்.

இதனால் கணினியின் முகப்பில் என்ன நடக்கிறதென்பதை பார்க்கமுடியும் ஆனால் அதை பயன்படுத்த பாஸ்வேர்ட் வேண்டும். இந்த டூலை தரவிறக்கி கணினியில் ரன் செய்யுங்கள் பின்னர் பாஸ்வேர்ட் கொடுத்ததும் லாக் செய்துவிடலாம்.

பொது இடத்தில் இருக்கும் கணினியில் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு விடயத்தை ரன் செய்யும் போது இந்த டூல் மிகவும் பயன்தருவதாக இருக்கும். உதாரணமாக குறிப்பிட்ட பவர்பாய்ன்ட் பிரஸன்டேஷனை ரன் செய்துவிட்டு பின்னர் லாக் செய்தால் பார்வையாளர்கள் அதைப் பார்க்க மட்டுமே முடியும் கணினியை பயன்படுத்த முடியாது.

டவுண்லோட் இங்கே. http://www.snapfiles.com/get/clearlock.html

சைக்கிளில் மொபைல் சார்ஜர்: நோக்கியா அறிமுகம்


செல்போனை சார்ஜ் செய்யாமல் வெளியில் சென்றுவிட்டீர்களா? கவலை வேண்டாம். சைக்கிள் இருந்தாலே போதும் செல்போன் சார்ஜ் ஆகிவிடும். ஆம், செல்போன் சைக்கிள் சார்ஜரை நோக்கியா ஒய்ஜ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
விரைவில் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மின்சார தட்டுப்பாடு உள்ள இந்த காலத்தில், மின்சார பயன்பாட்டைக் குறைப்பதற்காக இதை தயாரித்துள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அலுவலகம், ஷாப்பிங் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சைக்கிளில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் தான் சைக்கிள் வழி செல்போன் சார்ஜரை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இந்த சார்ஜர், சைக்கிள் சக்கரம் சுற்றும் போது, அதிலிருந்து முகப்பு விளக்கு எரிவதைப் போலவே, செல்போனுக்கு தேவையான மின்சாரத்தை கிரகித்துக் கொள்ளும். இதனால் மின்சார பயன்பாடு குறையும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித கேடும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வர உள்ள இதன் விலை ரூ.850 ஆகும். 

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய...


இமேஜ் பைல்களான BMP, JPEG, TIFF, PNG பைல் பார்மெட்டுக்களை நாம் எதாவது ஒரு இமேஜ் எடிட்டரை கொண்டு மட்டுமே காண முடியும். இந்த இமேஜ் எடிட்டர் சாதரணமான பெயின்ட்டாக கூட இருக்கலாம். நாம் இந்த இமேஜ்களை வேண்டுமெனில் பிடிஎப் பைலாக கூட மாற்றிக்கொள்ள முடியும்.
நம்முடைய சான்றிதழ்களை ஸ்கேன் செய்து நம்முடைய ஈ-மெயில் முகவரியிலேயோ அல்லது ஆன்லைன் கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைலாக மாற்றி இருப்பின் நாம் அந்த இமேஜ்களை ஒரே பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும்.

இமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய...


இமேஜ் பைல்களான BMP, JPEG, TIFF, PNG பைல் பார்மெட்டுக்களை நாம் எதாவது ஒரு இமேஜ் எடிட்டரை கொண்டு மட்டுமே காண முடியும். இந்த இமேஜ் எடிட்டர் சாதரணமான பெயின்ட்டாக கூட இருக்கலாம். நாம் இந்த இமேஜ்களை வேண்டுமெனில் பிடிஎப் பைலாக கூட மாற்றிக்கொள்ள முடியும்.
நம்முடைய சான்றிதழ்களை ஸ்கேன் செய்து நம்முடைய ஈ-மெயில் முகவரியிலேயோ அல்லது ஆன்லைன் கோப்பு சேமிப்பு இடத்திலேயோ பாதுகாப்பாக வைத்திருப்போம். ஆனால் பல சான்றிதழ்கள் இருப்பதால் அதனை நாம் தனித்தனியே மட்டுமே பார்க்க முடியும். அவ்வாறு இல்லாமல் பிடிஎப் பைலாக மாற்றி இருப்பின் நாம் அந்த இமேஜ்களை ஒரே பைலாக மாற்றி வைத்துக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் மூலம் இமேஜ்களை பிடிஎப் பைல்களாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த மென்பொருளில் இமேஜ் பைலை பதிவேற்றம் செய்து எடிட்டிங்கும் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது விண்டோஸ் 7 (32,64) ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இதனை ஒரு வகையில் பிடிஎப் பிரசன்டேன் என்றும் கூறலாம். இந்த மென்பொருளானது பவர்பாயின்ட் பிரசன்டேசனை போன்றது.

Saturday, 29 January 2011

2011- ன் புத்தம் புதிய வரவுகள்!


ஆண்டுதோறும் ஒரு முறை, உலக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெறும். இதனை "Consumer Electronics Show" என அழைக்கின்றனர். இந்த ஆண்டு லாஸ்வேகாஸ் நகரில் இந்த கண்காட்சி நடைபெற்றது.
இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் தாங்கள் அடுத்து கொண்டு வர இருக்கும் சாதனங்களைக் காட்சிக்கு வைப்பார்கள். இதன் மூலம் வர்த்தகர்கள் அவற்றிற்கான விற்பனை உரிமையினைப் பெற போட்டி போடுவார்கள்.

மேலும் சில சாதனங்களைத் தாங்கள் தயாரிக்கும் சாதனங்களில் இணைக்கவும் பலர் இந்தக் கண்காட்சியில் வட்டமிடுவார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சில அரிய கண்டுபிடிப்புகளை, தயாரிப்புகளை, வரும் ஆண்டில் நமக்குக் கம்ப்யூட்டர் சார்ந்து கிடைக்க இருப்பவை பற்றி இங்கு காணலாம்.

1. கேம்ஸ் கம்ப்யூட்டர்: விளையாட்டை மையப்படுத்தி தனியே சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. Razer Switchblade என்ற பெயரில் 7 அங்குல அளவில் மல்ட்டி டச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுடன் கூடிய, நொட்புக்கினைக் காட்டிலும் சற்றுப் பெரிய கம்ப்யூட்டர் ஒன்று தயாராகி விற்பனைக்கு வருகிறது.
இதுவரை வெளியிடப்படாத ஆட்டம்(Atom) ப்ராசசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டம், 128 ஜிபி சாலிட் ஸ்டேட் டிஸ்க், வை-பி, 3ஜி எனப் பல புதிய வசதிகளைத் தரும் பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு நொட்புக் கம்ப்யூட்டர் விற்பனை செய்யப்படும் விலையில் இதனை எதிர்பார்க்கலாம்.

2. ப்ராசசர்கள்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த விண்டோஸ் ஒரு சிப்பில் இணைத்துப் பதியப்பட்டு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் தரப்படும் விதம் மற்றும் இயக்கத்தில் அதிரடி மாற்றங்கள் வரலாம்.
இதனை SoC(System on Chip) என அழைக்கின்றனர். சிஸ்டம் சிப்பிலேயே தரப்படுவதால், கம்ப்யூட்டரின் பல பாகங்களுக்கும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் தகவல் பரிமாற்ற நேரம் முற்றிலுமாகக் குறைக்கப்படுகிறது. இதனால், கம்ப்யூட்டர் மிக அதிக வேகத்தில் இயங்கும். டேப்ளட் பிசிக்களுக்கு இது மிக உகந்ததாக இருக்கும்.

3. மெமரி:  இந்த ஆண்டு கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெமரி மற்றும் ஸ்டோரேஜ் சாதனங்கள் எண்ணிக்கை, இதுவரை இல்லாத வகையில் இருந்தன. சாம்சங் நிறுவனம் உலகின் முதல் DDR4 RAM சிப்பினை வெளியிட்டுள்ளது. நம்மில் பலர் இன்னும் DDR2 RAM சிப்பினையே பயன்படுத்தி வருகிறோம்.
சாம்சங் வெளியிட்டுள்ள இந்த சிப்பில் 30 நானோ மீட்டர் சிப்கள் உள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள DDR3 RAM சிப்பினைக் காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இந்த சிப்கள் இயங்குகின்றன. ஆனால் குறைவான மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன. ஒரு விநாடியில் 2.133 கிகா பிட்ஸ் தகவல்களைப் பரிமாறுகின்றன. இதனை 4 கிகா பிட்ஸ் ஆக மாற்றித் தர முடியும் என சாம்சங் அறிவித்துள்ளது.

4. ஸ்டோரேஜ்: உங்களுக்கு வேடிக்கையான ஒரு சாதனம் வேண்டுமென்றால், லெக்ஸார் நிறுவனம் வழங்கும், சாதாரண பிளாஷ் ட்ரைவ் அளவு உள்ள Echo MX என்னும் ஸ்டோரேஜ் சாதனத்தைப் பார்க்கலாம். இதன் மெமரி அளவு 128 ஜிபி. விநாடிக்கு 32 எம்பி தகவல்களைப் பரிமாறுகிறது.
17 எம் பி அளவில் எழுதுகிறது. இது உங்களுக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றினால், Victorinox Secure என்ற நிறுவனம் வழங்கும் சாலிட் ஸ்டேட் டிஸ்க் கொண்ட பிளாஷ் ட்ரைவினைக் காணலாம்.
இதன் கொள்ளளவு 256 ஜிபி. இது ஒரு ஸ்விஸ் ஆர்மி கத்தி போன்ற தோற்றத்தில் உள்ளது. உலகின் மிகச் சிறிய சாலிட் ஸ்டேட் டிஸ்க் என இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவும் போதவில்லை என்றால், Rocstor என்னும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 750 ஜிபி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட அனைத்தும் புதியனவாகவும், அனைவரின் கவனத்தைக் கவர்வதாகவும் இருந்தாலும், ஒரு சாதனம் பலரை வியப்பில் ஆழ்த்தியது. அது வெறும் கம்ப்யூட்டர் கேபின் தான்.

Zalmann நிறுவனம், ஜி.எஸ். 1200 என்ற பெயரில் அறிமுகப்படுத்திய கம்ப்யூட்டர் கேபின். இது ஏதோ சயின்ஸ் மூவியில் அறிமுகமாகும் சாதனம் போலத் தோற்றமளிக்கிறது. இதில் ப்ராசசர்களைக் குளிரவைக்க நான்கு மின்விசிறிகள், ஏழு ஹார்ட் டிஸ்க்கினை அமைக்க வசதி, மேலாக, எளிதாக அணுக நான்கு யு.எஸ்.பி. போர்ட், இ சடா (eSATA) சப்போர்ட், திரவம் பயன்படுத்தி கூலிங் செய்திட வசதி எனப் பல புதிய அம்சங்களைக் கொண்டதாக உள்ள இந்த கேபின் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

இன்னும் பல புதிய சாதனங்கள், லாஸ்வேகாஸ் கண்காட்சியில் இடம் பெற்றன.

உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?




பேஸ்புக் முகப்பில் உங்களுக்கு தெரியாமல் வேறுயாரவது விடயங்களை பிரசுரிக்கிறார்களா? அல்லது நண்பர்கள் நீக்கப்படுகின்றனரா?
அண்மையில் பேஸ்புக் ஸ்தாபகரின் கணக்கே ஹேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு பேஸ்புக் கணக்கை வேறு யாரும்  பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு தெரியப்படுத்த என்ன செய்யலாம்?
இதற்கு பேஸ்புக்கில் பாதுகாப்பு வசதியொன்று உள்ளது. பேஸ்புக் லாகின் செய்து Facebook.com -> Account -> Account Settings -> Account Security  செல்லுங்கள் பின்னர்
அங்கு ஐபி முகவரியை வைத்து பேஸ்புக் கணக்கு எங்கிருந்து கையாளப்படுகிறதென்ற விபரங்கள் காட்டப்படும்.  இதில் சந்தேகம் வரும்படியான இடங்கள் காட்டப்பட்டால் உடனடியாக அதை “end activity " செய்துவிடுங்கள்.
மேலதிக பாதுகாப்பு வசதியாக வேறு எங்கிருந்தாவது பேஸ்புக் கணக்கு அக்செஸ் செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கொடுத்து விடலாம்.  அல்லது உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருந்தால் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்குமாறூம் செய்துவிடலாம்.
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு send me an email என்பதையும் , மொபைல் வசதி இருந்தால் send me a text message என்பதையும் திக் செய்து விட்டால் மின்னஞ்சலில் அல்லது sms இல் பேஸ்புக் கணக்கை வேறு இடத்திலிருந்து யாரும் அக்செஸ் செய்தால் அந்த தகவல்கள் தெரியப்படுத்தப்படும்.

Friday, 28 January 2011

ஜிமெயிலின் புதிய வசதி: Incoming Mail and Chat Alert


நாம் எந்நேரமும் ஆன்லைனிலேயே இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமது ஜிமெயில் முகவரிக்கு வரும் ஏதேனும் முக்கியமான மெயில் அல்லது முக்கிய நபரிடம் இருந்து Chat வந்தாலோ தெரியாது.
இதன் மூலம் சில முக்கியமான சாட்டிங்கை நாம் தவற விட்டு விடுவோம். நமக்கு வந்துள்ள முக்கிய மெயிலை காலம் தாழ்ந்தே படிக்க கூடிய பிரச்சினை இருந்தது. இனி அந்த பிரச்சினை நமக்கு இருக்காது. ஜிமெயிலில் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதாவது DESKTOP NOTIFICATIONS EMAIL AND CHAT என்பதாகும்.
இனி நாம் ஆப்லைனில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட நமக்கு ஏதேனும் முக்கிய மெயில் வந்தாலோ அல்லது நமக்கு ஏதேனும் சாட் வந்தாலோ இனி நமக்கு ஒரு அறிவிப்பு செய்தி வரும். அதை பார்த்து முக்கிய நபரிடம் இருந்து வந்தால் நாம் அதை தவறவிடாமல் உடனே அதற்கு பதில் அளிக்க இயலும்.
* இந்த வசதியை பெற முதலில் இந்த லிங்கில் க்ளிக் செய்துwww.gmail.com  உங்கள் ஜிமெயில்  கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
* பின்பு ஜிமெயிலில் Settings க்ளிக் செய்யுங்கள்.
* அதன் பின் அங்கு உள்ள Destop Notification வசதிக்கு சென்று கீழே படத்தில் உள்ள மாதிரி தேர்வு செய்யவும்
* படத்தில் உள்ளதை போல தேர்வு செய்ததும் கீழே கடைசியில் உள்ள SAVE CHANGES என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் மாற்றத்தை சேமித்து கொள்ளுங்கள்.
* அவ்வளவு தான் இனி எப்பொழுதும் ஆன்லைனில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. புதிய மெயில் அல்லது சாட்டிங் வந்தால் நாம் ஆப்லைனில் இருந்தாலும் நமக்கு அறிவிப்பு செய்தி வந்து விடும்.
இந்த வசதியை தற்பொழுது கூகுள் குரோம் உலவி பயன்படுத்துபவர்கள் மட்டுமே பெற முடியும்.

இலங்கையில் புதிதாக நாணயத்தாள்கள்: முதல்தடவையாக ஐயாயிரம் ரூபா பெறுமதியிலும் பணநோட்டு



எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புழக்கத்தில் இருக்கும் நாணயத்தாள்களுடன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளொன்றையும் அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தீர்மானத்தின் பிரகாரம் தற்போதைக்கு புழக்கத்தில்  இருக்கும் 20,50,100,500, 1000,2000 ரூபா பெறுமதியான நாணயத்தாள்களுக்கும் புதிதாக நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதனுடன் இணைந்ததாக இலங்கையில் இதுவரை புழக்கத்தில் இல்லாத ஐயாயிரம் பெறுமதியான ரூபா நோட்டும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ரூபா நோட்டுகள் எதிர்வரும் சுதந்திர தினத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.
இலங்கையின் அபிவிருத்தி, சுபீட்சம், கலைகள், பறவைகள் என்பன புதிய ரூபா நோட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

Thursday, 27 January 2011

கணினியில் கோப்புக்களை தற்காலிகமாக சேமித்து பயன்படுத்துவதற்கு.



கணினியில் ஒழுங்கில்லாமல் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களை சேர்த்து தற்காலிகமாக ஒரு இடத்தில் வைத்து
அவற்றை அழித்துவிட அல்லது வேறு லொகேஷனுக்கு காப்பி செய்யும் பயன்பாட்டுக்கு உதவுவதே FileBucket  எனும் இலவச டூலாகும்.

இந்த டூலின் மூலம் கோப்புக்களை அழித்தல் மற்றும் பிரதி எடுத்தல் போன்ற செயற்பாடுகளுடன் அவற்றிக்கான சாட் கட் ஐ உருவாக்கவும் முடியும். கோப்புக்களை ஒழுங்கில்லாமல் சேமிப்பவர்கள் அவற்றை ஒழுங்குபடுத்த இந்த போர்ட்டபில் மென்பொருள் நிச்சயம் உபயோகம் தரும்.

டவுண்லோட் செய்வதற்கு இங்கே

யுடோரன்டில் கோப்புக்கள் எந்த நாடுகளிலிருந்து தரவிறக்கப்படுகிறது?




மென்பொருளை பயன்படுத்தி கோப்புக்களை தரவிறக்குவீர்கள். அவை எந்த எந்த நாடுகளிலிருந்து டவுண்லோட்
அல்லது அப்லோட் ஆகின்றன என்பதை கூகுள் மேப் உதவியுடன் இலகுவாக அறிய முடியும்.

இதற்கு umap என்ற அப்பிளிகேஷனை பயன்படுத்த வேண்டும்.

1.யு டோரனை நிறுவி விட்டு பின்னர்

2.அதில் sidebar இல் இருக்கும் Apps என்ற section இல் umap ஐ தேர்வு செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.

3.இனி sidebar இல் umap ஐ தேர்வு செய்தால் அங்கிருந்து இலகுவாக நாடுகள் பற்றிய விபரங்களை தொகுத்து பார்வையிட முடியும்.
யூடோரன்ட் டவுண்லோட் இங்கே
யூடோரன்ட் பற்றி அறியாதவர்கள் இங்கே செல்லுங்கள்.

கோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்


கணினியின் முகப்பில்(desktop) பேஸ்புக்கை பயன்படுத்துவது எவ்வாறு?



இணைய உலாவி மூலம் அடிக்கடி பேஸ்புக் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுபவரே நீங்கள்,
அவ்வாறெனில் இனிமேல் கணினியின் முகப்பு திரையிலேயே  பேஸ்புக்கை கொண்டுவரக்கூடிய Facebook Desktop என்கின்ற மென்பொருளை பயன்படுத்துங்கள்.
இவ்வாறு செய்தால் இனிமேல் பேஸ்புக் ஐ பார்வையிடுவதற்காக இணைய உலாவியை திறக்கவே தேவையில்லை.டெக்ஸ்டாப்பில் பேஸ்புக் இல் வருகின்ற அப்டேட்களை காட்டுமாறு செய்துவிடலாம்.
Facebook Desktop  என்பது பேஸ்புக்கை கணினியில் பயன்படுத்த உதவும் அளவில் சிறிய டெக்ஸ்டாப் அப்பிளிகேஷனாகும்.
மெசெஞ்சர் சாப்ட்வேர்கள் போலவே தொழிற்ப்படும் இது சிஸ்டம் டிரேயில் அமர்ந்து பேஸ்புக்கின் ஸ்டீரிமில் புதிதாக என்ன நடைபெற்றது என்பதை அலெட் செய்கிறது.அடோப் ஏர் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளத்தில் இயங்குகிறது இந்த மென்பொருள்.

பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட், புதிய வால் போஸ்ட், நண்பராக சேர விரும்புவர்கள் போன்றவற்றின் விபரங்களை காட்டுகின்றது இந்த மென்பொருள் ஆனால் பேஸ்புக் பேஜ்களை பற்றிய தகவல்களை காட்டவில்லை.

டவுண்லோட்

உங்கள் அடுத்த கம்ப்யூட்டராகும் "டேப்ளட் பிசி(Tablet PC)"


கம்ப்யூட்டர் உலகம் தற்போது நான்கு முனைச் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது. எந்தப் பக்கம் எட்டு எடுத்து வைப்பது என்று புரியாமல் உள்ளது. இன்றைக்கு பலருக்கு, முதல் கம்ப்யூட்டர் எது என்றால் அது பெர்சனல் கம்ப்யூட்டராக இல்லை. ஸ்மார்ட் போனாகத்தான் உள்ளது.
ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆனால் ஸ்மார்ட் போன்கள் நாம் எங்கு சென்றாலும் உடன் வருகின்றன. அதன் மூலம் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. எவ்வளவுதான் திறனுடன் செயல்பட்டாலும், ஒரு ஸ்மார்ட் போன், பெர்சனல் கம்ப்யூட்டராக முழுமையாக இடம் பெறாது.
எனவே தான் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும், ஸ்மார்ட் போனுக்கும் இடையே ஒரு சாதனம் இரண்டின் பயன்பாட்டினையும் முழுமையாகத் தரும் வகையில் தேவையாய் இருந்தது. அந்த இடத்தில் டேப்ளட் பிசி வந்து நம் தேவைகளை நிறைவு செய்து வருகிறது.
இதனால், கம்ப்யூட்டர் பயன்பாடு தற்போது இரு வகை கணினிகளில் மேற்கொள்ளப்பட்டு, எதில் தொடர்வது என்ற கேள்விக் குறியுடன் தொடர்கிறது. ஆனால், அண்மையில் லாஸ்வேகாஸ் நகரில் நடந்து முடிந்த தகவல் தொழில் நுட்பக் கருத்தரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட பட்டயக் கணிப்பொறிகளைக் (Tablet PC) காண்கையில், அதன் மாடல் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்கையில், இவை மொத்தமாக மக்களை சென்றடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகிறது. எனவே நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அதன் சில அம்சங்களை இங்கு பார்க்கலாம்.
1. பழைய மாடலில் மாற்றம்: தற்போதைய டேப்ளட் பிசி இதன் முன்னோடிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. முதலில் ஒரு டேப்ளட் பிசி, லேப்டாப் கம்ப்யூட்டரில், சுழலும் திரை ஒன்றை இணைத்தது போல வடிவமைக்கப்பட்டது. ஆனால் மக்களிடம் இவை எடுபடவில்லை. பின்னர், ஸ்மார்ட் போன் தொழில்

Wednesday, 26 January 2011

இணையதளத்தின் IP முகவரியை கண்டறிய...



எந்தவொரு இணையதளத்தின் IP முகவரியையும் பின்வரும் முறையை பயன்படுத்தி கண்டறியலாம்.


இலவச வயர்லெஸ் இணைப்பை பயன்படுத்த வயர்லெஸ் எயர் கிராக்கிங்(Wireless Air Cracking) முறை



வயர்லெஸ் என்பது மின்சார கடத்திகள் அல்லது கம்பிகளின் பயன்பாடின்றி தகவல்களை பரிமாற்றுவது ஆகும். இந்த தூரங்கள் குறைந்த அல்லது அதிகமான தூரங்களாக கூட இருக்கலாம்.
வயர்லெஸ் வலையமைப்புகள் அதிகமாக கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. வயர்லெஸ் அமைப்பு உள்ள எந்தவொரு இடத்தில் இருந்தும் நாம் இணையத்தை பயன்படுத்த முடியும்.
எனினும் அங்கீராமற்ற நபர்கள் பயன்படுத்தாத வகையில் கடவுச்சொல் கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி வயர்லெஸ் அமைப்பை பயன்படுத்த முடியும்.
இதில் ஒரு முறையே வயர்லெஸ் எயர் கிராக்கிங் முறை. இதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய

Tuesday, 25 January 2011

தண்ணீரில் மூழ்கினாலும் செயல்படும் அபூர்வ மொபைல்: பிரிட்டனில் கண்டுபிடிப்பு


நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி நீந்துகையில் மொபைல் போன் பயன்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. அப்படி ஒரு போன் பிரிட்டனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சோ்ந்த ட்ரேட்ஸ்மேன் நிறுவனம் இந்த ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனில் எப்.எம். ரேடியோ, புளுடூத் மற்றும் டார்ச் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
நீரில் மட்டுமின்றி,ஒரு வாகனத்தின் பின்புறம் கட்டப்பட்டு, 120 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மொபைல் போன் இழுத்து செல்லப்பட்ட பின்னரும் இது சிறப்பாக இயங்குகிறது.
அதன் பின், இரண்டு டன் கான்கிரீட் குப்பைகள் இந்த மொபைல் போன் மீது கொட்டப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனைக்கு பிறகும் மொபைல் போனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் விலை 70 பவுண்ட். தண்ணீராலும், விபத்துகளாலும் பாதிக்கப்படாத இந்த போனுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
நீச்சல் வீரர்கள், மலை ஏறுபவர்கள் ஆகியோருக்கு இந்த போன் மிகவும் உதவியாக இருக்கும்.

Monday, 24 January 2011

எச்சரிக்கை: அப்டேட் பைலில் மோசமான வைரஸ்


மைக்ரோசாப்ட் நிறுவனமானது ஒவ்வொரு மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது.
இவை அப்டேட் பைல்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இந்த செயல் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் "ஸ்டீவ் லிப்னர்" (Steve Lipner) பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது. அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ்.
இந்த வைரஸானது, விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும். பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடுகின்றது.
பின்னர் இந்த தகவல்கள் அனைத்தும் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என எளிதாக அறிந்து கொள்ளலாம்.
1.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமை மட்டும் தான் வெளியிடப்படும். 
2.மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும்.
3.மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும்.
எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

Sunday, 23 January 2011

இணையதளம்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 மற்றும் 8-ஜ பயன்படுத்துபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள சில பிழை வாயில்கள் மூலமாக, பாதுகாப்பற்ற கம்ப்யூட்டர்களுக்குள், ஹேக்கர்கள் தங்களின் கெடுதல் புரோகிராம்களை அனுப்பி எளிதாக அந்த கம்ப்யூட்டரின் செயல்பாட்டினைக் கைப்பற்ற முடியும் எனக் கூறியுள்ளது. 
ஹேக்கர்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்களுக்குப் பலவித ஆசைகளைக் காட்டி, ஒரு குறிப்பிட்ட  இணைய தளத்தை கிளிக் செய்திடத் தூண்டுகின்றனர். அந்த தளம் திறக்கப்பட்டவுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள பிழைவழிகளைப் பயன்படுத்தி, மால்வேர் புரோகிராகள் அனுப்பப்படுவது இவர்களுக்கு எளிதாகிறது.
கம்ப்யூட்டர் தரும் மெமரியினைப் பிரவுசர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்றபடி செயல்படுத்துகையில், இந்த ஹேக்கர்களின் புரோகிராம் அதற்கான குறியீடுகளை அனுப்புகிறது. பின்னர் அவற்றின் மூலம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றுகிறது. இதற்கான நிரந்தர தீர்வு ஏற்படுத்த மைக்ரோசாப்ட் முயன்று வருகிறது.

பேஸ்புக் கணக்கை திருட வேண்டுமா? இதோ அதற்கான மென்பொருள்


இன்றைய உலகில் இளைஞர்களின் மத்தியிலும், வர்த்தக சந்தையிலும் மிகவும் பிரபலமானது Facebook ஆகும். இதில் பெரும்பாலோரின் மிகுந்த ஆர்வம் நண்பர்களின்Facebook கணக்கை திருட வேண்டும் என்பதே.
அதற்காக சிலர் பித்துப்பிடித்தவர்கள் போல் இணையத்தளங்கள் முழுவதையும் அலசி ஆராய்கின்றனர். அதற்கான மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
இந்த மென்பொருளானது அதிவேக இணைய சேவையை பெற்று இருந்தால் மட்டுமே செயற்படுமாம்.

Saturday, 22 January 2011

ஒய்-ஃபை கதிர்களால் மனிதர்களுக்கு ஆபத்து!



Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateஒய்-ஃபை ( Wi - Fi : கம்பியில்லாத் தொடர்பு ) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அப்போது ஒய்-ஃபை(Wi - Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது எனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, மொபைல் போன்களின் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை எனவும் தெரிவித்துள்ளனர்.
 

கணினியின் வேகத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கோப்புகளை அளிக்கவும்!







BleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு (Hard Disk) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை (Temporary Files) தேடிப்பிடித்து அழிப்பதற்கு  பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலவி (Firefox Browser) யின் வேகத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க Bleachbit ஐ உபயோகிக்கலாம்.
இணைய உலவியில் நாம் விட்டுச் சென்ற தடயங்கள் (Traces), வரலாறு, குக்கீஸ் (Cookies) போன்றவற்றை இந்த மென்பொருள் நொடிப்பொழுதில் அழித்துவிடும்.
பையர்பாக்ஸ் முதல் கூகிள் குரோம் வரை எல்லா உலவிகளுடன் (Browser) ஒத்திசைவு கொண்டது இது. அடோபி ரீடர், அடோபி பிளாஷ், கூகிள் எர்த், ஜாவா, ஓபன் ஆபிஸ், ஸ்கைப் போன்ற 80 + பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை அடையாளம் கண்டு அழிக்க வல்லது.

Friday, 21 January 2011

பல நாட்டு தொலைகாட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் கண்டுகளிக்க _


 
  பல நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே இடத்தில் கண்டு களிக்க யாருக்குதான் ஆசை இல்லை.

அதுவும் இலவசமாக என்றால் கேட்கவும் வேண்டுமா? அத்தகைய ஒரு தளமே இது.

இங்கு சுமார் 1042 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரே தளத்தில் பார்த்து இரசிக்க முடியும்.

மற்றைய சில தளங்கள் போல இங்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

எந்த நாட்டின், எந்த மொழி அலைவரிசை வேண்டும் என்பதினை தேர்வு செய்து கொள்ளமுடியும்.

இணையதள முகவரி http://www.tvweb360.com/ 

Thursday, 20 January 2011

ஒரே இணையத்தளத்தை பார்வையிடும் மற்றொருவரிடம் அரட்டை அடிக்க Talkita




குறிப்பிட்ட இணையத்தளத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரம் உங்களைப்போல் அந்த இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடும் அதே

விடயத்தை வாசித்துக்கொண்டிருக்கும் மற்றொருவரிடம் அரட்டை அடிக்க முடிந்தால் ...

உதாரணமாக நெட்டில் ஒரு செய்தியை பார்க்கிறீர்கள் அந்த நேரம் மற்றொருவரும் அதைப்பார்வையிடுகிறார் அவரிடம் அதைப்பற்றிய கருத்துக்களை கேட்கலாம். அல்லது ஆன்லைனிலில் ஒரு பொருளை வாங்க நினைக்கிறீர்கள். அந்த நேரத்தில் அங்குவரும் மற்றொருவரிடம் சேர்ந்து அப்பொருளை வாங்க முடியுமல்லவா?.

இந்த வசதியைப்பெற உங்களிடம் கூகுளின் Chrome உலாவியும் அதனுடன் நிறுவ Talkita என்ற extension  இருந்தால் போதும் நெட்டில் ஒரே ஆர்வத்தை கொண்ட மற்றொருவரிடம் அரட்டை அடிக்கலாம்.


இந்த extension ஐ நிறுவியதும் browser bar இல் தெரியும் சாட் ஐகான் மீது கிளிக் செய்து செட்டிங்குகளை மாற்றங்கள் செய்துகொள்ளலாம். சாட் செய்வதற்கு பேஸ்புக் யூசர் ஐடியை பயன்படுத்தி லாகின் செய்துவிடுங்கள்.


குறிப்பு இந்த extension இன்னமும் பரிசோதனை நிலையில் இருப்பதால் பிரைவைசி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமைபெறவில்லை. அத்துடன் HTTPS என்ற பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தளங்களில் இயங்காது.

டவுண்லோட் செய்ய